புனே,
ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா – ஹைதராபாத் அணிகள் மோதின
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது .
தொடக்க வீரர்களாக வெங்கடேஷ் ஐயர் ,ரகானே களமிறங்கினர் .தொடக்கத்தில் வெங்கடேஷ் ஐயர் 7 ரன்களில் ஆட்டமிழந்தார் .பின்னர் வந்த நிதிஷ் ராணா ரஹானேயுடன் இனைந்து சிறப்பாக விளையாடினார் .
இருவரும் நிலைத்து ஆடி ரன்களை சேர்த்தனர் .அணியின் ஸ்கோர் 65 ரன்னாக இருந்த போது ராணா 26 ரன்களில் ஆட்டமிழந்தார் .அதன்பிறகு ரகானே 28 ரன்களில் வெளியேறினார் .
பின்னர் வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் ,ரிங்கு சிங்க் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர் .இதனால் அந்த அணி 100 ரன்களுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்தது .
அடுத்து ரசல் ,சாம் பில்லிங்ஸ் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.பில்லிங்ஸ் 39 ரன்களில் ஆட்டமிழந்தார் .கடைசி ஓவரில் ரசல் 3 சிக்ஸர் பறக்கவிட்டார்
இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது .ரசல் 28 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் .178 ரன்கள் இலக்குடன் ஹைதராபாத் அணி விளையாடியது .
தொடக்க வீரர்களாக கேப்டன் கேன் வில்லியம்சன் ,அபிஷேக் ஷர்மா களமிறங்கினர் .தொடக்க விக்கெட்டுக்கு 30 ரன்கள் சேர்த்தனர் ,அதன்பிறகு வில்லியம்சன் 9 ரன்களில் வெளியேறினார் .பின்னர் வந்த ராகுல் திரிபாதி 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் .விக்கெட்டுக்களை இழந்தாலும் அபிஷேக் சர்மா மறுமுனையில் அபாரமாக விளையாடினர் .பந்துகளை பவுண்டரி சிக்சருக்கு பறக்கவிட்டார் .
சிறப்பாக விளையாடிய அவர் 42 ரன்களில் ஆட்டமிழந்தார் .அடுத்து வந்த பூரன் 2 ரன்களிலும் ,மார்க்ரம் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர் .
இதன்பிறகு வந்த வீரர்களும் அடுத்தடுத்தது விக்கெட்டுக்களை இழந்தனர்.இதனால் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்தது .இதனால் கொல்கத்தா அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது .