பெங்களூரு-விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும், ‘ககன்யான்’ திட்டத்திற்கு பயன்படுத்தப்பட உள்ள, ‘ராக்கெட் பூஸ்டர்’ நேற்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்தும் பணிகளில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. அதற்கான பரிசோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில், இதற்கு பயன்படுத்தப்பட உள்ள ராக்கெட் பூஸ்டர் நேற்று பரிசோதிக்கப்பட்டது.
ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருக்கும் ஏவு தளத்தில் இருந்து, ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டில் பொருத்தப்படும் பூஸ்டர் சோதிக்கப்பட்டது.இஸ்ரோ தலைவரும், விண்வெளித் துறையின் செயலருமான சோமநாத், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனர் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில், இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
பெங்களூரு-விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும், ‘ககன்யான்’ திட்டத்திற்கு பயன்படுத்தப்பட உள்ள, ‘ராக்கெட் பூஸ்டர்’ நேற்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. nsimg3029319nsimg விண்வெளிக்கு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.