கனேடிய மாகாணம் ஒன்றில், 75 ஆண்டுகள் உறுதியாக நிற்கவேண்டிய பாலம் ஒன்று, பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவிடப்பட்டு சில மணி நேரத்திற்குள் நிலை குலைந்து சரிந்தது.
2018ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி, Saskatchewan மாகாணத்திலுள்ள Clayton முனிசிபாலிட்டி, Dyck Memorial Bridge என்னும் பாலப் பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் தனது முகநூல் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
ஆனால், சிறிது நேரத்திற்குள் அந்த பாலம் இடிந்து விழுந்துவிட்டது. நல்ல வேளையாக அந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை.
பல ஆண்டுகளாக அந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வந்த நிலையில், தற்போது, அந்தப் பாலத்தை வடிவமைத்த பொறியாளரான Scott Gullacher என்பவர் விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
Scott, அந்த பாலம் கட்டப்படும் இடத்தில், தூண்கள் நிறுத்தப்படும் நதிப்படுகை உறுதியாக இருக்கிறதா என்பதை சோதிக்காததுடன், அதன் வடிவமைப்பும் கவனமாக செய்யப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
ஆகவே, Scott மீது அடுத்த மாதம் விசாரணை ஒன்று துவக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.