கொழும்பு ஆமர் வீதியில் மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
எரிவாயு கோரியே இவ்வாறு ஆர்ப்பாட்டம மேற்கொள்ளப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கடந்த 9ஆம் திகதி நாட்டில் அசாதாரண நிலை ஏற்படுத்தப்பட்டதை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காலை வேளையில் தளர்த்தப்பட்டு பிற்பகல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்றைய தினம் காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் இன்று மாலை 6 மணிக்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் இன்று காலை முதல் கொழும்பின் பல பகுதிகளில் மக்கள் எரிவாயு கோரி வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுத்து வருகின்றனர்.
இரண்டாம் இணைப்பு
கொழும்பு – ஆட்டுபட்டித்தெரு பகுதியிலும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் ஒன்றுதிரண்ட மக்கள் தமக்கு எரிவாயு பெற்றுத் தருமாறு கோரியிருந்ததுடன், இதன்போது பொலிஸாரும் மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை எரிவாயுவை பெற்றுத் தரகோரி இன்று காலை முதல் கொழும்பின் பல பகுதிகளில் மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
கொழும்பு – மட்டக்குளி பகுதியில் வீதி மறிக்கப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தமக்கு எரிவாயு பெற்றுத் தருமாறு கோரியே இந்த போராட்டத்தை மக்கள் ஆரம்பித்துள்ளனர்.
எரிவாயு பெற்றக் கொடுக்கப்படுமாக இருந்தால் வீதியிலிருந்து விலகி போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.