உள்நாட்டில் உணவு பாதுகாப்பு மற்றும் தேவையை உறுதி செய்யவும், விலையேற்றத்தை கட்டுப்படுத்தவும் கோதுமை ஏற்றுமதிக்கு தற்காலிகமாக உடனடி தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக உக்ரைனில் இருந்து தானிய ஏற்றுமதி முடங்கிய நிலையில், உணவு தேவை குறித்து உலக நாடுகள் கவலை கொண்டுள்ளன.
இந்த நிலையில், கோதுமை உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியா, அதிகளவில் கோதுமை ஏற்றுமதி செய்து வந்தது. இதன் காரணமாக இந்தியாவில் 10 ஆண்டுகாளில் இல்லாத வகையில் ஏப்ரல் மாதத்தில் கோதுமையின் விலை அதிகரித்த நிலையில், இதனை கட்டுப்படுத்த கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு உடனடி தடை விதித்துள்ளது.
இருப்பினும், மே 13 ஆம் தேதிக்கு முன்னதாக கோதுமை ஏற்றுமதி ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால், அவற்றிற்கும், கோதுமை தேவை என கோரிக்கை விடுக்கும் நாடுகளுக்கும் மட்டும் ஏற்றுமதி செயப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.