கோவை மாநகர பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா நோய்த்தொற்று பரவல் காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்ட போது, மாணவிக்கு அவரது பெற்றோர் செல்போன் வாங்கி கொடுத்தனர்.
படத்தின் பக்கம் கவனம் செலுத்தாத அந்த மாணவி, தனது செல்போனில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பதிவேற்றம் செய்து அதிகவனம் செலுத்திவந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ந்துபோன பெற்றோர் சிறுமியை கண்டித்து உள்ளனர். இதனை தனது இன்ஸ்டாகிராம் தோழியிடம் மனம்விட்டு சொல்லிய சிறுமி, திடீரென சம்பவத்தன்று மாயமாகி உள்ளார்.
மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மக்கள் காணாமல் போனது குறித்து புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தினர்.
மாணவியுடன் இன்ஸ்டாகிராமில் தொடர்பில் இருந்த அவரின் தோழி மூலம், ‘என்னையும் கூப்பிட்டிருக்கலாமே … நானும் வந்திருப்பேன் … எங்க டி போயிட்டுருக்க’ என்று இன்ஸ்டாகிராமில் பேச வைத்தனர்.
அதற்க்கு அந்த மனைவி பதில் அளிக்கும் போது அவர் ரயிலில் செல்வதை உறுதி செய்தனர். தொடர்ந்து, அந்த ரெயில் கோவை-சென்னை விரைவு ரெயில் என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து, மாணவியின் செல்போன் சிக்னலை வைத்து அரக்கோணம் அருகே ரெயில் செல்வதை உறுதி செய்து, அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு மாணவியின் புகைப்படத்தையும், சிறுமியின் உடை அடையாளத்தையும் தெரிவித்தனர்.
ரெயில் அரக்கோணம் வந்ததும், ரெயிலில் பயணம் செய்த மாணவியை ரெயில்வே போலீசார் மீட்டனர். பின்னர் போலீசார் மாணவியிடம் நடத்திய விசாரணையில் இன்ஸ்டாகிராம் மூலமாக சென்னை விடுதியில் தங்கி படிக்கும் மாணவியை தேடி இந்த மாணவி சென்னைக்கு சென்றது தெரிய வந்தது.
இதனையடுத்து மனைவிக்கும் பெற்றோருக்கும் நல்ல அறிவுரைகளை கூறி போலீசார் வழி அனுப்பிவைத்தனர்.