சர்வதேச விமான சேவையில் சாதனை படைத்த இண்டிகோ.. ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் நிலை என்ன?

சென்ற நிதியாண்டில் அதிக பயணிகளை வெளிநாடு அழைத்துச் சென்று முதலிடத்தைப் பிடித்துள்ளது இண்டிகோ நிறுவனம்.

இந்தியாவின் டாப் இரண்டு விமான நிறுவனங்கள் மட்டும் இந்தியாவின் 65 சதவீத வெளிநாட்டு பயணிகளுக்கு சேவைகளை வழங்கியுள்ளன. இண்டிகோ நிறுவனத்தை தொடர்ந்து இந்த பட்டியலில் உள்ள பிற நிறுவனங்கள் எவை என்பதை இங்கு விளக்கமாக பார்க்கலாம்.

கிரெடிட் சூசி சொன்ன நல்ல விஷயம்.. பட்டையை கிளப்பிய இண்டிகோ பங்கு விலை..!

இண்டிகோ

இண்டிகோ

பட்ஜெட் விமான போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ, 74 உள்நாட்டு மற்றும் 24 வெளிநாட்டு வழித்தடங்களில் விமான சேவையை வழங்கி வருகிறது. 2021-2022 நிதியாண்டில் அதிகபட்சமாக 30 சதவீத வெளிநாட்டுப் பயணிகள் இண்டிகோ நிறுவன சேவையைப் பயன்படுத்தியுள்ளார்கள். 2016 நிதியாண்டில் ஆண்டு இதுவே 9 சதவீதமாக இருந்துள்ளது.

ஏர் இந்தியா

ஏர் இந்தியா

டாடா குழுமம் மீண்டும் ஏர் இந்தியா நிறுவனத்தை அண்மையில் வாங்கியது. 70 வெளிநாட்டு மற்றும் 100 உள்நாட்டு வழித்தடங்களில் ஏர் இந்தியா விமான சேவையை வழங்கி வருகிறது. 2016 நிதியாண்டில் 31 சதவீத வெளிநாட்டுப் பயணிகள் ஏர் இந்தியா சேவையை பயன்படுத்தியுள்ளார்கள். அதுவே சென்ற நிதியாண்டில் 29 சதவீதமாகச் சரிந்துள்ளது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
 

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

கொச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா என 30 வழித்தடங்களில் விமான சேவையை வழங்குகிறது. 2016-ம் நிதியாண்டில் 14 சதவீத வெளிநாட்டு பயணிகளுக்குச் சேவை வழங்கிய நிலையில், 2021 2022 நிதியாண்டில் 23 சதவீதமாக அது சரிந்துள்ளது.

ஸ்பைஸ் ஜெட்

ஸ்பைஸ் ஜெட்

குர்காமை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 36 வழித்தடங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானச் சேவையை வழங்கி வருகிறது. 2016-ம் நிதியாண்டில் 7 சதவீதமாக இருந்த ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் விமான பயணிகள் எண்ணிக்கை 2021-2022 நிதியாண்டில் 8 சதவீதமாகச் சரிந்துள்ளது.

ஜெட் ஏர்வேஸ்

ஜெட் ஏர்வேஸ்

2019-ம் ஆண்டு அதிக நிதி நெருக்கடியில் சிக்கிய ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தற்காலிகமாக தங்களது சேவையை நிறுத்தியது. 2016-ம் நிதியாண்டு 40 சதவீத இந்திய வெளிநாட்டு பயணிகள் இதை பயன்படுத்தி இருந்தனர். 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் மீண்ம் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை தொடங்க முயற்சிகளை எடுத்து வருகிறது.

 விஸ்தரா

விஸ்தரா

டாடா குழுமம், சிங்கப்பூர் ஏர்லைன் நிறுவனங்கள் இணைந்து விஸ்தரா விமான நிறுவனத்தை நடத்தி வருகின்றன.33 உள்நாட்டு மற்றும் 4 வெளிநாட்டு விமான சேவைகளை விஸ்தார வழங்கி வருகிறது. 2021-2022 நிதியாண்டில் 4 சதவீத இந்திய வெளிநாட்டுப் பயணிகளுக்கு தங்களது விமான சேவையை வழங்கியுள்ளது.

கோ ஏர்

கோ ஏர்

கோ ஏர் நிறுவனம் 2021-2022 நிதியாண்டில் 6 சதவீத இந்திய வெளிநாட்டு பயணிகளை கவர்ந்துள்ளது. மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் 22 வழித்தடங்களில் விமான சேவையை வழங்கி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Indigo Made Most Passengers Abroad in 2022 FY. How About Air India And Spicejet

Indigo Made Most Passengers Abroad in 2022 FY. How About Air India And Spicejet | சர்வதேச விமான சேவையில் சாதனை படைத்த இண்டிகோ.. ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் நிலை என்ன?

Story first published: Friday, May 13, 2022, 17:44 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.