ஆந்திர மாநிலம் மணியம் மாவட்டம் பார்வதி புரத்தில் ஓடும் பேருந்தில், ஜன்னலுக்கு வெளியே கையை வைத்துக் கொண்டு பெண் பயணி ஒருவர் பேருந்தில் அமர்ந்திருந்த போது எதிரே வந்த மினி டெம்போ உரசியதில் அந்தப்பெண்ணின் கை துண்டாகி சாலையில் விழுந்தது.
கையை இழந்து வலியால் அலறித்துடித்த தவித்த அந்த பெண்ணை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், பேருந்து இருக்கையில் அமர்ந்திருந்த அந்த பெண்ணிடம் ஊர் விவரம் கேட்டுக் கொண்டிருந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது