புது டெல்லி:
டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள பல வணிக நிறுவனங்கள் இயங்கி வந்த நான்கு மாடி கட்டட வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் மருத்தவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இதுவரை 70 பேர் இந்த தீ விபத்தில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், மேலுஇம் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தீ விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டார். அதன்பின் பேசிய அவர், ‘இந்த சம்பவம் குறித்து நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தீ விபத்தில் உயிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாயும், அதில் காயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும்.
இது ஒரு பெரிய தீ விபத்து. உடல்கள் கருகிய நிலையில் இருந்ததால் அடையாளம் காண மிகவும் கடினமாக இருந்தது. காணாமல் போனவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களை அடையாளம் காண டெல்லி அரசு உதவி வருகிறது.
இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.