வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, திருச்சி, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழையும், எஞ்சிய பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
அதேபோல, 15,16ஆகிய தேதிகளிலும் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கணித்துள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையில் இரு நாட்களுக்கு நகரின் ஒரு சில இடங்களில் மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.