அகர்தலா:
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் முதல் மந்திரி பதவியை பிப்லப் குமார் தேவ் இன்று ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை ராஜ்பவன் சென்று ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளேன் என தெரிவித்தார்.
அவரது ராஜினாமாவை தொடர்ந்து மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.
இந்நிலையில், திரிபுரா மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக மாணிக் சாஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார் என பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.