திருமண மண்டபத்தில் நிகழ்ந்த விபத்தில் பதினோராம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் , பெத்த குப்பத்தில் தனியார் திருமண மண்டபம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் பரிமாறுவதற்காக வேலைக்கு வந்தவர்கள் லிப்ஸ்டிக் இரண்டாவது மாடிக்கு பயணம் செய்துள்ளனர்.
அப்பொழுது லிஃப்டில் இரும்பு ரோப் பாரம் தாங்காமல் இருந்து கீழே விழுந்தது பெட்டியில் பயணம் செய்த மாணவன் சீத்தல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றவர்களுக்கு காயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.