'நிலைமை இன்னும் மோசமாகும்': இலங்கை நெருக்கடி குறித்து ரணில் விக்கிரமசிங்க

இலங்கை நெருக்கடி: இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை மேம்படுவதற்கு முன்னர், தற்போது இருக்கும் நிலையை விட இன்னும் மோசமாகும் என இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெள்ளிக்கிழமை எச்சரித்துள்ளார். இலங்கையில் நீண்ட நாட்களாக இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன், கடுமையான எரிபொருள் தட்டுப்பாடும் நிலவி வருகிறது.

இலங்கையில் வாழ்வது கடினம்

இலங்கையில் உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. பொது மக்கள் பலருக்கு உணவைக் கைவிட வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. நெருக்கடியைச் சமாளிக்க அரசாங்கம் தவறியதால் கோபமடைந்த சிலர் வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டனர். 

இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அசாதாரண நிலை உருவானதோடு, மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.

மேலும் படிக்க | இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கைது?

புதிய பிரதமர் விக்கிரமசிங்க என்ன கூறினார்?

நாட்டின் 26வது பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க, பிபிசிக்கு அளித்த பேட்டியில், நாட்டில் உள்ள குடும்பங்களுக்கு மூன்று வேளை உணவு கிடைப்பதை உறுதி செய்வதாக தெரிவித்தார். உலகம் முழுவதிலுமிருந்து அதிக நிதி உதவிக்கு முறையீடு செய்த புதிய பிரதமர், ‘பசி ஒரு பிரச்சனையாக இருக்காது, அனைவருக்கும் உணவு கிடைக்கும்’ என்றார்.

நிலைமை இன்னும் மோசமாகும்

நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடி சரியாகும் முன் இன்னும் மோசமாகும் என்று பிரதமர் எச்சரித்தார். இலங்கையின் பொருளாதாரம் “உடைந்து விட்டது” என்று வர்ணித்த அவர், “பொறுமையாக இருங்கள், நான் அனைத்தையும் சரி செய்வேன்” என்று இலங்கை மக்களுக்கான செய்தியை அளித்தார். 

இதற்கிடையில், இலங்கையில் ஏற்பட்ட கலவரத்திற்கு காரணமான மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட 7 பேரை கைது செய்ய வலியுறுத்தி கொழும்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | இலங்கைக்கு டன் கணக்கில் பால் பவுடர்- தயார் நிலையில் தமிழக அரசு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.