விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில் 49 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. நெல் கொள்முதல் நிலையங்களில் நாள்தோறும் ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எந்தவித கட்டணமும் பணியாளர்கள் வசூல் செய்யக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே செஞ்சி அருகே நல்லான்பிள்ளை பெற்றாள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பருவகால பட்டியல் எழுத்தர் ராமச்சந்திரன் விவசாயிகளிடம் லஞ்சம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதை அதிகாரிகள் குழு ஆய்வு செய்து உறுதிப்படுத்தியது. இதையடுத்து அவரை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து கலெக்டர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.