பசில் விளையாட முடியாத போட்டியை விளையாட தயாராகும் ரணில் – அச்சம் வெளியிட்ட வீரவன்ச


அரசாங்கத்தின் நம்பகமான நகர்வுகளுக்கு ஆதரவளிப்போம் என தேசிய சுதந்திர முன்னணியின் (NFF) தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

தமது தரப்பால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்த போதிலும், திடீரென ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“நாங்கள் எதிர்கொள்ளப்போகும் நெருக்கடி குறித்து ஆரம்பத்திலிருந்தே எச்சரித்து வந்தோம். அதன் விளைவாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவும் நானும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டோம்,”

பிரதமர் பதவி விலக வேண்டும் என்றும், பின்னர் அனைத்துக் கட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவும், ஒவ்வொரு கட்சியிலிருந்தும் ஒரு பிரதிநிதியைக் கொண்ட தேசிய சபையை (NC) அமைக்கவும் ஏற்கனவே முன்மொழிந்துள்ளதாக அவர் வலியுறுத்தினார்.

பசில் விளையாட முடியாத போட்டியை விளையாட தயாராகும் ரணில் - அச்சம் வெளியிட்ட வீரவன்ச

மகிந்த ராஜபக்ச அமைதியாக பதவி விலகினால், அவர் மறைந்திருக்க வேண்டிய அவசியமில்லை, இந்த நிலையை தவிர்த்திருக்கலாம்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, சனத் நிஷாந்த, மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் அவரை அமைதியான முறையில் பதவி விலக விடவில்லை.

ஆனால் நாங்கள் நாட்டை ஸ்திரப்படுத்தவே விரும்பினோம்” என வீரவன்ச கூறினார்.

தமது முன்மொழிவுகளுக்கு ஜனாதிபதி சாதகமாக பதிலளித்ததாகவும், ஆனால் முன்னாள் பிரதமர் பதவி விலக விரும்பவில்லை எனவும் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.

பசில் விளையாட முடியாத போட்டியை விளையாட தயாராகும் ரணில் - அச்சம் வெளியிட்ட வீரவன்ச

அனைத்துக் கட்சி ஆட்சியை அமைத்து மக்களையும் நாட்டையும் அராஜகத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.

அனைத்துக் கட்சி அரசாங்கத்தை ஏற்று எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து ஏனைய கட்சிகள் மற்றும் நிபுணர்களின் உதவியுடன் ஏற்கனவே திட்டங்களை உருவாக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறான நிலையில் திடீரென ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்தமை குறித்து வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார். ரணில் பிரதமராக பதவியேற்றதற்கு எதிர்க்கட்சிகளும் காரணம் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தற்போதைய நெருக்கடிக்கு விக்கிரமசிங்கவால் தீர்வு காண முடியும் என்று நாங்கள் நம்பவில்லை, ஏனெனில் இந்த நெருக்கடிக்கும் அவரே பொறுப்பு.

பசில் ராஜபக்ச விளையாட முடியாத போட்டியை விக்கிரமசிங்க கைப்பற்றி விளையாட தயாராகிவிடுவாரோ என்ற அச்சம் எமக்கு உள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.     

பசில் விளையாட முடியாத போட்டியை விளையாட தயாராகும் ரணில் - அச்சம் வெளியிட்ட வீரவன்ச



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.