விஜய் டிவியில், ஒளிபரப்பான ஆஃபிஸ் சீரியல் மூலம், சின்னத்திரைக்குள் நுழைந்தார் ஹேமா. பின்னர் பொன்னுஞ்சல், தென்றல், சின்ன தம்பி, குலதெய்வம் மற்றும் மெல்ல திறந்தது கதவு போன்ற பல சீரியல்களில் நடித்தார். அதோடு, ஆறாது சினம், சவரக்கத்தி, வீரையன் மற்றும் இவன் யார் என்று தெரிகிறதா போன்ற சில படங்களிலும் ஹேமா நடித்துள்ளார்.
ஆனால் அவருக்கு பெயரையும், புகழையும் வாங்கிக் கொடுத்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்.
மூன்று சகோதரர்களைக் கொண்ட கூட்டுக் குடும்பம் மற்றும் அவர்களின் மளிகைக் கடையான “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்த சீரியல், அதன் திரைக்கதையால் குடும்ப பார்வையாளர்களை ஈர்த்தது.
இந்த சீரியலில் ஸ்டாலின் முத்து, வெங்கட் ரெங்கநாதன் மற்றும் குமரன் தங்கராஜன், சுஜித்ரா, காவ்யா மற்றும் ராஜ்குமார் ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் ஜீவாவின் மனைவியாக மீனாவாக, ஹேமா நடிக்கிறார்.
கணவனிடம் கோபப்படுவது, கொழுந்தனாரிடம் வம்பிழுப்பது, நாத்தனார்களை பாடாய்படுத்துவது, வீட்டிலுள்ளவர்களை எடுத்தெறிந்து பேசுவது இதுதான் மீனாவின் முழு-நேர வேலை.
இப்படி சீரியலில் பிஸியாக நடித்தாலும், ஹேமா சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். அதில் அடிக்கடி தன்னுடைய போட்டோஷூட்கள், ஷூட்டிங் போது எடுத்த படங்கள், குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்களை பகிர்வார்.
அப்படி ஹேமா இப்போது பகிர்ந்த போட்டோஷூட் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. அதில் ஹேமா, பச்சை நிற தாவணியில் பார்க்கவே அம்சமாக இருக்கிறார். அதைப்பார்த்த பலரும் அழகா இருக்கீங்க. கீயூட் என கமென்டில் பதிவிட்டு வருகின்றனர்.
இதேபோல ஹேமா, மெரூன் கலர் தாவணியில் சமீபத்தில் எடுத்த போட்டோஷூட் இன்ஸ்டாவில் பயங்கரமாக வைரலானது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“