சண்டிகர்:
பஞ்சாப் மாநிலத்தில் மே 14 முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பள்ளிகளுக்கான கோடை விடுமுறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில கல்வி அமைச்சர் குர்மீத் சிங் மீட் ஹேயர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதன்படி அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளிலும் மே 15 முதல் மே 31 வரை ஆஃப்லைன் முறையில் வகுப்புகள் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.
மே 15 முதல் மே 31 வரை, தொடக்கப் பள்ளி நேரம் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் காலை 7 மணி முதல் மதியம் 12:30 மணி வரையும் செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து ஜூன் 1 முதல் ஜூன் 30 வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும், அவர் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்...டெல்லி வணிக வளாக தீ விபத்தில் 27 பேர் உயிரிழப்பு