லிங்குசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ’தி வாரியர்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
’சண்டக்கோழி 2’ படத்திற்குப் பின்னர் ராம் பொத்தினேனி நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்தினை இயக்கி முடித்துள்ளார் லிங்குசாமி. நாயகியாக கீர்த்தி ஷெட்டி நாயகியாகவும் ஆதி வில்லனாகவும் மற்றும் நதியா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். பிருந்தா சாரதி வசனங்கள் எழுத தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
வரும் ஜூலை 14 ஆம் தேதி வாரியர் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், இன்று டீசர் வெளியாகியுள்ளது. ரெடின் கிங்ஸ்லி குரலில் ‘இந்தப் போலீஸ்காரங்கத் தொல்லை தாங்க முடியலை’ எனத் தொடங்கும் டீசரில் செம்ம ஃபிட்டாகவும் Good ஆகவும் கவனம் ஈர்க்கிறார் ராம் பொத்தினேனி. ’ஆனா, ஒன்னுடா அடிச்சவுடனே பெய்ன் கில்லர் டேப்லட் கொடுத்துடறான். அடிக்கிறான் டேப்லட் கொடுக்கிறான். அடிக்கிறான் டேப்லட் கொடுக்கிறான் என ட்ரெடின் கிங்ஸ்லி ரிப்பீட் மோடில் பேசி ரசிகர்கள் முகத்தில் ‘ஸ்மைலி’ வரைவைக்கிறார். ராம் பொத்தினேனி போலீஸாக நடிக்கும் முதல் படம் இது. அவரின் போலீஸ் கெட்டப் ஆக்ஷன் காட்சிகளும் பிருந்தா சாரதியின் வசனங்களும் படத்திற்கு பிரம்மாண்டத்தைக் கொடுத்திருக்கின்றன. உடல் மொழியாலேயே மிரட்டுகிறார் நடிகர் ஆதி.
“பான் இந்தியா படம் பார்த்திருப்ப… பான் இந்தியா ரெளடிஸ் பார்த்திருக்கியா’, ’மை டியர் ரெளடிஸ் முடிஞ்சா மாறுங்க இல்லன்னா ஓடுங்க’, ’வீரம்ங்கிறது தேடி வந்தவங்கள அடிக்கிறதில்ல, தேடிப்போய் அடிக்கிறது’ போன்ற பல வசனங்களும் பான் இந்தியா ரேஞ்சுக்கு கவனம் ஈர்க்கின்றன.