சென்னை: தி.நகரில் இயங்கி வரும் பைனான்ஸ் நிறுவனத்தில், கடந்த 2017ம் ஆண்டு எம்.ஆர்.கார்டன் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர்கள் என்று கூறி ரவி, பொன்னம்மாள், மஞ்சு, வெங்கடேசன் மற்றும் பலர் சேர்ந்து ₹2.76 கோடி கடன் பெற்றுள்ளனர். அதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இடத்தின் ஆவணத்தை அடமானம் வைத்துள்ளனர்.அந்த ஆவணத்தை சரிபார்த்தபோது அவை போலியானவை என்றும், ஏற்கனவே பத்திரப்பதிவு துறையினரால் ரத்து செய்த ஆவணம் என்றும் தெரியவந்தது. எனவே போலியான ஆவணங்களை சமர்பித்து ₹2.76 கோடி கடன் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக, அவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தலைமறைவான ரவி (45), அவரது மனைவி மஞ்சு (44) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.