மத்திய அரசின் முழு முயற்சியால் இந்திய பொருளாதாரம் மீட்சி அடைந்து வருகிறது- பாதுகாப்பு மந்திரி உறுதி

லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிதிச் சந்தை குறித்த பயிலரங்கில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
பட்டயக் கணக்காளர்கள் நிதி மேலாண்மை மற்றும் பொருளாதார தணிக்கையின் முதுகெலும்பு போன்றவர்கள். நாட்டின் வணிகச் சூழலை சரியான திசையில் வழிநடத்துவதில் அவர்களது சிறந்த பங்களிப்பை பாராட்டுகிறேன்.
நாட்டின் எல்லைகளை துணிச்சலுடனும் அர்ப்பணிப்புடனும் பாதுகாக்கும் நமது ஆயுதப் படை வீரர்களைப் போலவே, நமது நிதி அமைப்பின் காவலர்கள் பட்டயக் கணக்காளர்கள். அவர்கள் கடமைகளைச் செய்யும் போது நேர்மையை உறுதிப்படுத்த வேண்டும்.
கொரோனா பெருந்தொற்று மற்றும் தற்போதைய ரஷியா-உக்ரைன் மோதல் காரணமாக விநியோகச் சங்கிலி மற்றும் சரக்குப் போக்குவரத்து இடையூறுகள் காரணமாக உலகப் பொருளாதாரம் மிகவும் கடினமான கட்டத்தில் இருக்கிறது.
கொரோனா காலகட்டத்திற்கு இடையே, மத்திய அரசு எடுத்த முழு முயற்சிகளின் காரணமாக இந்திய பொருளாதாரம் மீட்சி அடைந்து வருகிறது. 
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.