மீண்டும் நயன்தாராவுக்காக கதை எழுதும் நடிகர்
கடந்த 2019ல் மலையாளத்தில் வெளியான படம் லவ் ஆக்சன் டிராமா. நயன்தாரா, நிவின்பாலி இணைந்து நடித்த இந்த படத்தை இளம் நடிகர் தயன் சீனிவாசன் என்பவர் இயக்கியிருந்தார். பிரபல நடிகர் சீனிவாசனின் மகன்.. இளம் இயக்குனர் வினித் சீனிவாசன் தம்பி என்பதை பலர் அறிந்திருக்கலாம்.. முதல் படத்திலேயே நயன்தாராவை வைத்து இயக்கிய தயன் சீனிவாசன் தற்போது படங்களில் நடித்துக் கொண்டே அடுத்த படத்தை இயக்குவதற்காக கதையை தயார் செய்து வருகிறாராம்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் கூறும்போது மீண்டும் நயன்தாராவை தனது படத்திற்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் அவருக்கு ஏற்ற வகையில் கதையை தயார் செய்து வருவதாகவும் கூறியுள்ளார். நயன்தாராவை பொறுத்தவரை எப்போதுமே தன்னை ஒரு சகோதரராகவே கருதுபவர் என்பதால் அவரை மீண்டும் அணுகி தனது படத்தில் நடிக்குமாறு கேட்பதற்கு தனக்கு எந்தவித தயக்கமும் இல்லை என்றும் கூறியுள்ளார் தயன் சீனிவாசன்.