இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டது குறித்தும், இலங்கையில் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் குறித்தும் இலங்கை எழுத்தாளரும், அரசியல் விமர்சகரும், நடிகருமான ஜெயபாலன் சில முக்கிய தகவல்களையும், கருத்துக்களையும் கூறியுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்திருப்பத்தில் இருக்கும் பின்புலங்கள் என்ன என்பது குறித்து அவர் கூறியுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க குறித்து அவர் கூறுகையில், இலங்கை இராணுவம் 100 சதவீதம் அவரை ஆதரிக்கிறது. இந்த நிலையில் ராஜபக்ச குடும்பத்திற்கு தேவையாக இருந்தது என்னவென்றால், தங்களுக்கு அரசியல் ரீதியாக விரோதமான ஒருவரை கொண்டுவந்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதால், அரசியல் ரீதியாக விரோதமானவராகவும் இருக்கவேண்டும், குடும்ப நண்பராகவும் இருக்கவேண்டும், அதேநேரம் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) பேச்சுவார்த்தை நடத்தி பொருளாதார பிரச்சனைகளை தீர்க்கவேண்டிய சூழலில், அமெரிக்கா, மேற்கு நாடுகள் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் ஆதரவைப் பெறக்கூடிய ஒருவரையும் தேட வேண்டும். எனவே இந்த எல்லா அம்சங்களும் கொண்ட ஒரே ஒரு நபர் ரணில்.
இலங்கை எம்.பி மரணம் தொடர்பில் நாமல் ராஜபக்ச வெளியிட்ட திடுக்கிடும் உண்மை!
மேலும், இலங்கை பிரதமராக அடுத்து பதவியேற்க வேண்டும் என்று அமெரிக்காவால் சுட்டிக்காட்டப்பட்டவரும் ரணில் தான். இவ்வ்வாறு அவர் கூறினார்.
மேலும், பல முக்கிய தகவல்களை அவர் கூறியுள்ளார். அவரது நேர்காணலை இங்கு கீழே காணலாம்..