ஈரோட்டில் லாட்டரியில் பல லட்சம் ரூபாயை இழந்த நூல் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு எல்லப்பாளையம் முல்லைநகரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். நூல் வியாபாரியான இவர், நேற்றிரவு தனது செல்போனில் வீடியோ எடுத்து அனைவருக்கும் அனுப்பியுள்ளார். இதில், தான் 62 லட்சம் ரூபாயை லாட்டரியில் இழந்துள்ளதாகவும், அதனால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் பேசியுள்ளார்.
எனது தற்கொலைக்கு கருங்கல்பாளையம் 39வது வார்டு கவுன்சிலர் கீதாஞ்சலியின் கணவர் செந்தில் தான் காரணம் என்று தெரிவத்தவர் அவரிடம் இருந்து 30 லட்சம் ரூபாயை நஷ்டயீடாக பெற்று தனத குடும்பத்தினரிடம் வழங்கவேண்டும் என கூறியுள்ளார். மேலும் லாட்டரி சீட்டால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் லாட்டரி சீட்டை ஒழித்து விடுங்கள் என வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனையறிந்த சிலர் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாட்டரி சீட்டில் பல லட்சம் ரூபாய் இழந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM