ஸ்வீடன், பின்லாந்து போன்ற நாடுகளை இணைத்துக் கொள்ள நேட்டோ கூட்டமைப்பு கதவுகளைத் திறந்த ,கொள்கை முடிவை ஆதரிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்யாவின் போர் நீடிக்கும் நிலையில் நீண்ட காலமாக நடுநிலை வகித்து வந்த ஸ்வீடனும் பின்லாந்தும் நேட்டோவில் இணைய முடிவு செய்துள்ளன. இரு நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசி வாயிலாக ஜோ பைடன் உரையாடினார்.
இதையடுத்து வெள்ளை மாளிகை விடுத்த அறிக்கையில் ஸ்வீடனும் பின்லாந்தும் தங்கள் எதிர்காலத்தையும் வெளியுறவுக் கொள்கையையும் பாதுகாப்பையும் தீர்மானிக்கும் முடிவை அதிபர் ஜோ பைடன் ஆதரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.