எஸ்ஐபி என்றால் என்ன? எஸ்ஐபி என அழைக்கப்படும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் ஒரு வழிமுறையாகும். மியூச்சுவல் ஃபண்டில் பாரம்பரியமாக மொத்தமாக முதலீடு செய்வதற்கு மாற்றாகத் தவணை முறையில் முதலீடு செய்வதையே எஸ்ஐபி என அழைக்கின்றனர்.
3 மாதத்தில் ரூ.1506 கோடி லாபம் பார்த்த டெக் மகேந்திரா.. முதலீட்டாளர்களுக்கும் சர்பிரைஸ் உண்டு?
எஸ்ஐபி மூலம் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் குறைந்தது 100 ரூபாய் தவணையாகச் செலுத்தி முதலீடு செய்யலாம். ரெக்கரிங் டெபாசிட் என அழைக்கப்படும் தொடர் வைப்பு நிதி போன்று எஸ்ஐபி வழியாக மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
யாரெல்லாம் எஸ்ஐபி மூலம் முதலீடு செய்யலாம்?
பங்குச்சந்தையில் முதலீடு செய்ய விரும்புபவர்கள், தினமும் சந்தை போக்கை பார்த்து முதலீடு செய்ய முடியாதவர்கள் எஸ்ஐபி மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். கால இடைவெளியைத் தேர்வு செய்துவிட்டால் அதற்கு ஏற்றார் போல வங்கிக் கணக்கிலிருந்து பணம் பிடித்தம் செய்யப்பட்டு முதலீடு தொடரும்.
நெகிழ்வுத்தன்மை
நீண்ட காலத் தொலைநோக்கு கண்ணோட்டத்துடன் எஸ்ஐபி முதலீடுகளில் தொடர அறிவுறுத்தப்படும் அதே வேளையில், அங்கே கட்டாயம் ஏதும் இல்லை. முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 6 மாதம் அல்லது 1 வருடத்திற்குப் பிறகு எந்த நேரத்திலும் திட்டத்திலிருந்து இடையிலேயே வெளியேறலாம். மேலும் ஒருவர் முதலீடு செய்யப்படும் தொகையை அதிகரிக்கலாம் / குறைத்துக் கொள்ளலாம். வரி சேமிப்பு அளிக்கும் மியுச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்யும் போது குறைந்தது 3 ஆண்டுகளுக்கு இடையில் வெளியேற முடியாது.
2022-ம் ஆண்டு
எஸ்ஐபி மூலம் முதலீடு செய்ய சிறந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள்!
Fund Name | Monthly Investment | 1 Year Returns | 3 years Return | 5 years Return |
Axis Bluechip Fund | 5000 | 52.52% | 20.79% | 18.16% |
Axis Focused 25 Fund | 5000 | 61.91% | 20.94% | 19.03% |
DSP Equity Fund | 5000 | 31.90% | 14.69% | 14.36% |
Franklin India Focused Equity Fund | 5000 | 80.39% | 22.68% | 15.78% |
HDFC Balance Advantage Fund | 5000 | 55.65% | 14.39% | 13.47% |
ICICI Prudential Bluechip Fund | 5000 | 59.24% | 19.41% | 15.69% |
Kotak Standard Multicap Fund | 5000 | 48.94% | 14.15% | 12.51% |
Motilal Oswal Focused 25 Fund | 5000 | 40.77% | 20.01% | 14.34% |
Nippon India large Cap Fund | 5000 | 69.69% | 15.55% | 14.48% |
TATA India Consumer Fund | 5000 | 49.09% | 26.81% | 19.06% |
பொறுப்பு துறப்பு
கட்டுரையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகளின் விளைவாக ஏற்படும் இழப்புகளுக்கு கிரேனியம் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜிஸ், ஆசிரியர் பொறுப்பல்ல. Tamil.Goodreturns.in பயனர்கள் எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன் நிபுணர்களுடன் சரிபார்க்க அறிவுறுத்துகிறது.
Best Mutual Fund Scheme in 2022 For SIP
Best Mutual Fund Scheme in 2022 For SIP | 2022-ம் ஆண்டு எஸ்ஐபி மூலம் முதலீடு செய்ய சிறந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள்!