23 வயதில் 100 கோடி சம்பாதித்த ஹைதராபாத் இளைஞன்..!!

இன்றைய வேகமாக இயங்கும் உலகில் தொழில்நுட்ப உதவியுடன் சரியான ஐடியா இருந்தால் யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்க முடியும்.

ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் பணத்தைக் கொட்ட பல லட்சம் முதலீட்டாளர்கள் காத்திருக்கும் நிலையில் 23 வயது இளைஞன் கல்லூரி படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு துவங்கு நிறுவனத்தின் மூலம் சுமார் 100 கோடி ரூபாய்ச் சம்பாதித்துள்ளார் சங்கர்ஷ் சந்தா.

மருந்து மாத்திரைகளுடன் அமெரிக்கா செல்கிறீர்களா? உஷார்.. உங்கள் விசா ரத்தாகலாம்..!

சங்கர்ஷ் சந்தா

சங்கர்ஷ் சந்தா

ஹைதராபாத்தில் உள்ள ஸ்லேட் – தி ஸ்கூலில் 12 ஆம் வகுப்பு முடித்த பிறகு 2016 இல் பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கினார் சங்கர்ஷ் சந்தா. 2,000 ரூபாயில் ஆரம்பித்து அடுத்த இரண்டு வருடங்களில் தொடர்ந்து அதிகப் பணத்தை முதலீடு செய்தார்.

வேல்யூ இன்வெஸ்டிங்

வேல்யூ இன்வெஸ்டிங்

14 வயதில் ‘வேல்யூ இன்வெஸ்டிங்-ன் தந்தை’ என்று அழைக்கப்படும் அமெரிக்கப் பொருளாதார நிபுணர் பெஞ்சமின் கிரஹாமின் கட்டுரையைப் படித்த பிறகு, பங்குச் சந்தையில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டவர் சங்கர்ஷ்.

பென்னட் பல்கலைக்கழகம்
 

பென்னட் பல்கலைக்கழகம்

ஆரம்பத்தில், அவர் தனது மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லத் திட்டமிட்டார், ஆனால் பின்னர் அவர் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு கிரேட்டர் நொய்டாவில் இருக்கும் பென்னட் பல்கலைக்கழகத்தில் பி.டெக் கம்பியூட்டர் சயின்ஸ் பிரிவில் சேர்ந்தார்.

கம்பியூட்டர் சயின்ஸ்

கம்பியூட்டர் சயின்ஸ்

அங்கு அவர் படித்தது கம்பியூட்டராக இருந்தாலும் பணம் குறித்து மக்களின் மனப்பான்மையை ஆய்வு செய்து வந்தார். இந்த ஆராய்ச்சியில் பணக்காரர் ஆகவும் இருந்தாலும் சரி ஏழை நடுத்தர மக்களாக இருந்தாலும் சரி உடல் நலம், மன அமைதியைத் தாண்டி பணம் தான் அனைவருக்கும் முக்கியமானதாக விளங்குகிறது என்பதை அறிந்துகொண்டார்.

அஜய் பத்ரா

அஜய் பத்ரா

பென்னட் பல்கலைக்கழகத்தில் அவர் தனது வழிகாட்டியான இன்னோவேஷன் மற்றும் தொழில்முனைவோர் மையம் மற்றும் பென்னட் ஹேட்சரியின் இயக்குனர் அஜய் பத்ரா-வை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அஜய் பத்ரா சங்கர்ஷ் சந்தா ஆராய்ச்சிக்கு உதவியது மட்டும் அல்லாமல் சாவர்ட் (Savart) நிறுவனத்தைத் துவங்கவும் உதவியுள்ளார்.

ரூ.13 லட்சமாக உயர்வு

ரூ.13 லட்சமாக உயர்வு

இதற்கிடையில் சங்கர்ஷ் சந்தா பங்குச்சந்தை முதலீடு வேகமாக வளரத் தொடங்கியது, அவர் தனது நிறுவனத்தைத் தொடங்க முதலீட்டில் கிடைத்த பணத்தில் சிறிது எடுத்துக்கொண்டார். இரண்டு வருடங்களில் சுமார் ரூ.1.5 லட்சம் முதலீடு செய்த சங்கர்ஷ் சந்தா, தனது முதலீட்டின் மதிப்பு ரூ.13 லட்சமாக உயர்ந்துள்ளது.

ரூ. 8 லட்சம் பங்குகள் விற்பனை

ரூ. 8 லட்சம் பங்குகள் விற்பனை

அவர் 2017 இல் தனது நிறுவனத்தைத் தொடங்க ரூ. 8 லட்சம் மதிப்புள்ள பங்குகளை விற்று, பணமாக எடுத்துள்ளார். மீதமுள்ள பணத்தைச் சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்தார். இதனுடன் தனது ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் மூலம் தனது சம்பாதிக்கத் துவங்கினார்.

ஃபின்டெக் ஸ்டார்ட்அப்

ஃபின்டெக் ஸ்டார்ட்அப்

பங்குகள், மியூச்சுவல் பண்ட் மற்றும் பத்திரங்களில் முதலீடு செய்ய மக்களுக்கு உதவும் ஃபின்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமான சாவார்ட்-ஐ நிறுவனர் சங்கர்ஷ். இந்த நிறுவனத்தை Svobodha Infinity Investment Advisors Private Limited என்ற பெயரில் பதிவு செய்துள்ளார்.

சாவார்ட் நிறுவனம்

சாவார்ட் நிறுவனம்

ஹைதராபாத்தில் உள்ள ககன் மஹாலில் 2,000 சதுர அடியில் இந்தப் பங்குச் சந்தை முதலீட்டு சேவை அளிக்கும் அலுவலகம் உள்ளது. இந்த நிறுவனத்தில் தற்போது சங்கர்ஷ் கீழ் சுமார் 35 பேர் பணிபுரிகின்றனர்.

படிப்பு பாதியிலேயே நிறுத்தம்

படிப்பு பாதியிலேயே நிறுத்தம்

சங்கர்ஷ் கிரேட்டர் நொய்டாவில் உள்ள பென்னட் பல்கலைக்கழகத்தில் பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டுப் படித்துக் கொண்டிருந்தார், அப்போது அவர் படிப்பை விட்டுவிட்டு முழுநேர பங்கு வர்த்தகத்தில் கவனம் செலுத்த முடிவு செய்து ரூ.8 லட்சம் முதலீட்டில் 2017-ம் ஆண்டு Savart நிறுவனத்தைத் தொடங்கினார்.

ரூ.100 கோடி

ரூ.100 கோடி

23 வயதான சங்கர்ஷ் சந்தா, 17 வயதில் இருந்து பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கி, ஸ்டார்ட்அப் நிறுவனத்தை உருவாக்கி அதன் மூலம் கிடைக்கும் வருமானம், மற்றும் நிறுவன மதிப்பீட்டு ஆகியவை சேர்த்து நிகர மதிப்பு ரூ.100 கோடியாக உயர்ந்துள்ளது.

Savart செயலி

Savart செயலி

கூகுள் பிளேயில் Savart என்ற ஸ்மார்ட்போன் செயலியை பதிவிறக்கம் செய்து கணக்கை உருவாக்கி பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் முடியும். முதலில் இத்தளத்தில் ஆண்டுச் சந்தா திட்டம் ரூ.99 மட்டுமே. பின்னர் அது 299 ஆனது, ஜனவரி முதல் அது ரூ 4999 ஆக உயர்ந்துள்ளது.

பட்ஜெட்டுக்கு ஏற்ப முதலீட்டு

பட்ஜெட்டுக்கு ஏற்ப முதலீட்டு

இந்தச் செயலி வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டுகளுக்கு ஏற்ப வெவ்வேறு முதலீட்டு விருப்பங்களை வழங்குகிறது. இந்நிறுவனத்தின் வருவாய் சந்தாக்களில் இருந்தும் வருகிறது மற்றும் வாடிக்கையாளர்கள் தங்கள் முதலீடுகளில் பெறும் லாபத்தில் சுமார் 1% முதல் 2.5% வரையிலான கமிஷன் வாயிலாகவும் வருகிறது.

ரூ.9 கோடி முதலீடு

ரூ.9 கோடி முதலீடு

இதுவரை சாவர்ட் மூலம் வாடிக்கையாளர்கள் ரூ.9 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளனர். நிறுவனத்தைத் துவங்கிய முதல் ஆண்டில் ரூ.12 லட்சமும், இரண்டாம் ஆண்டில் ரூ.14 லட்சமும், மூன்றாம் ஆண்டில் ரூ.32 லட்சமும், 2020-21 நிதியாண்டில் நிறுவனம் ரூ.40 லட்சமும் விற்றுமுதல் ஈட்டியுள்ளது.

ஹைதராபாத்

ஹைதராபாத்

ஹைதராபாத்தில் ஹிமாயத் நகரில் உள்ள 2BHK அடுக்குமாடி குடியிருப்பில் சங்கர்ஷ் தனது பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார். அவரது தந்தை, சந்திரசேகர் சந்தா, ஒரு சிறிய ஐடி நிறுவனத்தை நடத்தி வந்தார், ஆனால் இப்போது அவர் சாவர்ட்-ல் பைனான்ஸ் பிரிவை கவனித்து வருகிறார்.

சகோதரி தருணி சந்தா

சகோதரி தருணி சந்தா

அவரது மூத்த சகோதரி தருணி சந்தா அமெரிக்காவில் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் ஆக உள்ளார், மேலும் அவரது தாயார் சங்கீதா சந்தா எழுத்துத் துறையில் இருந்த நிலையில் தற்போது சாவர்ட் நிறுவனத்தில் உதவி செய்து வருகிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Sankarsh Chanda 23yr old College dropout net worth to Rs 100 crore with Fintech Startup

Sankarsh Chanda 23yr old College dropout net worth to Rs 100 crore with Fintech Startup 23 வயதில் 100 கோடி சம்பாதித்த ஹைதராபாத் இளைஞன்..!!

Story first published: Saturday, May 14, 2022, 14:25 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.