30 அடிக்கு மேல் ஆக்ரோஷத்துடன் எழும் கடல்-ஆபத்தை உணராத சுற்றுலாப் பயணிகள் செய்யும் காரியம்!

தனுஷ்கோடியில் தொடர்ந்து மூன்று நாட்களாக கடல் சீற்றம் நீடித்துவரும்நிலையில், 30 அடிக்கு மேல் ஆக்ரோஷத்துடன் எழும் கடல் அலைகளுக்கு இடையே, சுற்றுலாப் பயணிகள் ஆபத்தை உணராமல் செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுக்கும் சம்பவம் நிகழ்ந்து வருகிறது.
அசானி புயல் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கோடைக் காலத்திலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ராமேஸ்வரம், தனுஷ்கோடி, அரிச்சல்முனை, முகுந்தராயர் சத்திரம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் வழக்கத்தைவிட காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த காற்றின் வேகத்தால், கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக நீடிப்பதால், கடல் சீற்றம் அடைந்து காணப்படுகிறது.
image
இதையடுத்து தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் துறைமுகத்தில் உள்ள பாலத்தில் கடல் அலைகள் மோதி 30 அடிக்கு மேல் அலைகள் ஆக்ரோஷத்துடன் எழுந்து காணப்படுகிறது. நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஆக்ரோஷத்துடன் எழும் கடல் அலைகளின் ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள், புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து செல்வது வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
இதனிடையே, தனுஷ்கோடி பகுதியில் மத்திய அரசு சார்பில் ரூபாய் 7.09 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி மத்திய கப்பல் மற்றும் போக்குவரத்துறை அமைச்சர் மஞ்சு மாண்டவியர் அவர்களால் தனுஷ்கோடி கலங்கரை விளக்கம் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது
இந்த நிலையில் தனுஷ்கோடி கலங்கரை விளக்கத்தின் பணிகள் முழுமையாக முடிவடைந்ததை அடுத்து மத்திய துறைமுகம் கப்பல் போக்குவரத்து நீர்வழி அமைச்சர் சர்பானந்தா சோனோவால் அவர்களால் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது. இதையடுத்து தனுஷ்கோடி பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகள் பள்ளி மாணவ மாணவிகள் ஏராளமானோர் 229 படிகளில் ஏறிச்சென்று தனுஷ்கோடி கடல் மற்றும் இயற்கை அழகையும் பார்த்து ரசித்து செல்கின்றனர்.
மேலும் தனுஷ்கோடி கலங்கரை விளக்கத்தின் அமைக்கப்பட்டுள்ள லிப்ட் அடுத்த மாதம் பயன்படுத்தப்படும் என்றும் இன்று திறக்கப்பட்டதால் முதல் நாள் மட்டும் வருகின்ற சுற்றுலாப் பயணிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் அனைவருக்கும் கட்டணமுமின்றி இலவசமாக பார்வையிட அனுமதித்து வருவதுடன் நாளைமுதல் ஒரு நபருக்கு பத்து ரூபாய் வசூல் செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.