இந்தியன் ரயில்வேஸ் கடந்த 6 ஆண்டுகளில் அவசியமில்லை என 72,000 பணியிடங்களை நீக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அதிக ஊழியர்கள் பணியாற்றும் ஒரு நிறுவனமாக இந்திய ரயில்வேஸ் இருந்தது வந்தது. அதில் பல வேலைகளைச் செய்ய புதிய தொழில்நுட்பங்கள் வந்துள்ளதால், 72,000 பணியிடங்களை நீக்கியுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ‘Unemployment Insurance” பற்றி தெரியுமா உங்களுக்கு?
பரிந்துரை
கடந்த 6 ஆண்டுகளில் இந்தியன் ரயில்வேஸ் நிறுவனத்திலிருந்து 81,000 பணியிடங்களை நீக்க பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. அதில் குரூப்-சி மற்றும் குரூப்-டி பிரிவில் இருந்து 72,000 பணியிடங்களை மட்டும் நீக்கியுள்ளனர். இந்த பணியிடங்களுக்கு வருங்காலத்திலும் ஆட்களை எடுக்கப்போவதில்லை.
வேறு பணியிடங்கள்
இப்போது இந்த பணிகளைச் செய்து வரும் ஊழியர்களும் வேறு பணிகளுக்கு மாற்றப்படுவார்கள். ரயில்வே செயல்பாடுகள் நவீனமாகவும், டிஜிட்டல் மயமாக்கப்பட்டதாகவும் மாறியுள்ளது.
மண்டலங்கள்
இந்தியன் ரயில்வேஸில் உள்ள 16 மண்டலங்களில் 2015-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையில் 56,888 பணியிடங்கள் அவசியமில்லை என்ற காரணத்துக்காக நீக்கப்பட்டுள்ளது. 15,495 பணியிடங்கள் விரைவில் நீக்கப்பட உள்ளது.
தெற்கு ரயில்வேவில் எவ்வளவு பணியிடங்கள் நீக்கம்?
அதிகபட்சமாக வடக்கு ரயில்வேவில் 9000 பணியிடங்களும், தெற்கு ரயில்வேவில் 7,524 பணியிடங்களும், கிழக்கு ரயில்வேவில் 5,700 பணியிடங்களும், தென் கிழக்கு ரயில்வேவில் 4,677 பணியிடங்களும் நீக்கப்பட்டுள்ளன.
அவுட்சோர்சிங்
மத்திய அரசு மற்றும் மாநில அரசு வேலைவாய்ப்பு அறிவிப்புகளுக்காக பலர் காத்திருக்கும் நிலையில், அவுட்சோரிசிங் மூலம் பல பணியிடங்களை ரயில்வேஸ் நிரப்பி வருகின்றது. அதனால் ரயில்வேவில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களும் தொடர்ந்து குறைந்து வருகின்றன என கூறுகின்றனர்.
செலவு
ரயில்வேவிற்கு வரும் ஒரு ரூபாய் வருமானத்தில் 37 பைசா ஊழியர்களுக்காகவும் 16 பைசா ஓய்வூதியர்களுக்கும் செலவு செய்யப்படுகிறது. வருவாயில் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் செலவாகிறது. அதற்கு முக்கிய காரணம் ரயில்வேவில் அதிக ஊழியர்கள் பணியாற்றுவதே என ரயில்வே நிர்வாக நினைக்கிறது.
வேலைவாய்ப்பு
எனவே ஊழியர்களைக் குறைக்கும் விதமாக இந்தியன் ரயில்வேஸ் அவுட்சொர்சிங் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக இப்போது 72,000 பணியிடங்கள் நீக்கப்பட்டுள்ளது. அரசு வேலைவாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு இது அதிர்ச்சியளிக்கும் தகவலாக உள்ளது.
Indian Railways Removes 72,000 ‘non-essential’ posts in Last 6 years
Indian Railways Removes 72,000 ‘non-essential’ posts in Last 6 years | 6 ஆண்டுகளில் 72,000 பணியிடங்களை நீக்கிய இந்தியன் ரயில்வேஸ்!