Elon Musk Twitter: பதவியைத் துறந்த இரண்டு ட்விட்டர் நிர்வாகிகள் – காரணம் என்ன தெரியுமா?

Elon Musk
Twitter: உலக பணக்காரர்களில் ஒருவரான டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், ட்விட்டரை வாங்கியதில் இருந்தே, பலரது வேலைகளில் கைவைக்கப் போகிறார் என்ற பேச்சு எழுந்தது.
எலான் மஸ்க்
ட்விட்டரை வாங்கியதைத் தொடர்ந்து, பலர் வேலை இழப்பார்கள் என்றும் வல்லுநர்களால் கணிக்கப்பட்டது.

ஆனால், இவ்வளவு சீக்கிரம் அந்த நடவடிக்கைத் தொடங்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இப்போது Elon Musk நிறுவனத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால், மூத்த நிர்வாகிகள் வேலை இழந்துள்ளனர். ட்விட்டரின் நுகர்வோர் தயாரிப்புகளின் பொது மேலாளர் கெய்வான் பெய்க்பூர் (
Keyvon Beykpour
) மற்றும் வருவாய் பொது மேலாளர் புரூஸ் பால்க் (
Bruce Falck
) ஆகியோர் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளனர்.

WhatsApp Warning: மோசடியில் இது புதுசு – எச்சரிக்கும் வாட்ஸ்அப்?

ராஜினாவை ட்விட்டரில் அறிவித்த அலுவலர்கள்

Beykpour தனது ராஜினாமாவை ட்விட்டரில் அறிவித்தார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், அதிர்ச்சிகரமான தகவல்களையும் அவர் வெளியிட்டுள்ளனர். அதாவது,
பராக் அகர்வால்
தான் தன்னை நிறுவனத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டதாக பேக்பூர் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் தலைமை நிர்வாக அலுவலர்,
ட்விட்டர்
அணியை வேறு திசையில் கொண்டு செல்ல விரும்புகிறார். “உண்மை என்னவென்றால், நான் ட்விட்டரை விட்டு வெளியேறுவது பற்றி ஒருபோதும் நினைத்ததில்லை” என்று அவர் தனது ட்வீட்டில் உருக்கமாக எழுதியுள்ளார்.

இது தன்னுடைய முடிவு அல்ல என்றும் நிறுவனமே தன்னை நிறுவனத்தை விட்டு வெளியேறச் சொன்னது. எது எப்படி இருந்தாலும் ட்விட்டரின் வளர்ச்சியை நான் விரும்புகிறேன். ட்விட்டர் இணை நிறுவனர் ஜாக் டோர்சிக்கு என நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

Edit Button: ட்விட்டரில் அதிரடி மாற்றம் – கோரிக்கை வைத்த தாய்!

ஃபால்க் எழுதிய ட்வீட்

மேலும், Falck கடந்த 5 ஆண்டுகளாக ட்விட்டரில் பணியாற்றி வருகிறார். நிறுவனத்தில் இருந்து தான் விலகுவதாக அவரும் ட்விட்டரிலேயே அறிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஃபால்க் ஒரு பதிவை வெளிப்படுத்தி இருந்தார்.

அதில், “நான் 5 ஆண்டுகள் பணியாற்ற ஒத்துழைத்த அனைத்து அணி உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு நன்றி. இந்த வகை வணிகத்தை நிர்வகிப்பதும் நடத்துவதும் குழுவின் பொறுப்பாகும்.” என்று அவர் தெரிவித்திருந்தார்.

Nokia N73: ஞாபகம் வருதே… பெயர் தான் பழசு; ஆனா அம்சமெல்லாம் புதுசு!

பராக் அகர்வால் விளக்கம்

இதற்கிடையில், கிடைத்த தகவல்களின்படி, ட்விட்டர் தலைமை நிர்வாக அலுவலர், ஃபால்க் மற்றும் பெய்க்பூர் ராஜினாமா செய்ததை அதிகாரப்பூர்வமாக மின்னஞ்சல் மூலம் அறிவித்துள்ளார். அதே மின்னஞ்சலில் இந்த இடத்திற்கான பணியமர்த்தல் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், யாரையும் பணிநீக்கம் செய்யும் திட்டம் நிறுவனத்திற்கு இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். இருப்பினும், ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, இரு அலுவலர்களும் தங்கள் இலக்குகளை அடையத் தவறியதற்காக நீக்கப்பட்டனர் என்று குறிப்பிட்டுள்ளது.

மேலதிக செய்திகள்:

Android 13: ஆண்ட்ராய்டு 13இல் கிடைக்கும் 10 முக்கிய அம்சங்கள்!Google I/O 2022: பிக்சல் வாட்ச், பிக்சல் 6A, பிக்சல் பட்ஸ் என நிறைய இருக்குUpcoming Phones May 2022: கூகுள் பிக்சல் முதல் விவோ X80 வரை டாப் கிளாஸ் போன்கள் வெளியாக தயார்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.