ஐபோன் 13 அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இப்போது பலர் ஐபோன் 14 வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்கள்.
ஆப்பிள்
நிறுவனத்தின் ஐபோன்களை வாங்க பலர் ஆர்வமாக உள்ளனர். ஐபோன் 14 இந்த ஆண்டு செப்டம்பரில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஐபோனில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஐபோன் 15
குறித்து பெரிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்பிள் நிறுவனம் இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துவது இதுவே முதல் முறை. அதன்படி, ஐபோன் 15 இல் லைட்னிங் போர்ட் இருக்காது என்று தெரியவந்துள்ளது.
டைப்-சி போர்ட்டுக்கு மாறும் ஆப்பிள்
ஐபோன் 15 ஆனது டைப்-சி சார்ஜிங் போர்ட் ஆதரவுடன் வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மாறி வரும் தொழில்நுட்ப மாற்றங்களால், உலகளவில் பெரும்பாலான மக்களுக்கு எளிதாக கிடக்கும் அம்சங்களை நிறுவ ஆப்பிள் முயற்சித்து வருகிறது.
இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுவது, கொரோனா முடக்கத்தினால் ஏற்பட்ட சிப் தட்டுப்பாடு. இதுபோன்ற காலகட்டங்களில் மூலப் பொருள்கள் இல்லாமல் நிறுவனம் தனித்துவமான ஆதரவு பொருள்களை உருவாக்க சிரமப்படும்.
Apple: தயாரிப்பு பணிகளை நிறுத்திய ஆப்பிள் – வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
ஆய்வாளர் வெளியிட்ட ட்வீட்
ஆய்வாளர் மிங்-சி குவோ ட்விட்டரில் கூறுகையில், ஆப்பிள் விரைவில் USB டைப்-சி போர்ட்டை சார்ஜ் செய்வதற்கும் தரவு பரிமாற்றத்திற்கும் பயன்படுத்தும். 2022 ஆண்டின் பிற்பகுதியில் வெளியாகும் ஐபோன் 15 ஸ்மார்ட்போன் மூலம் டைப்-சி ஆதரவை ஆப்பிள் நிறுவனம் பயனர்களுக்கு வழங்கவுள்ளது.
மேலும், இப்படியான மாற்றங்களை நிறுவனம் மேற்கொண்டால், இந்த அம்சத்துடன் வெளிவரும் முதல் ஆப்பிள் ஸ்மார்ட்போன் இதுவாகத் தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது போன்ற வதந்திகள் இதற்கு முன்பும் பலமுறை பரவியுள்ளது. வெளியான ஐபோனில் போர்ட் இருக்காது என்றும் கூறப்பட்டது.
WhatsApp Warning: மோசடியில் இது புதுசு – எச்சரிக்கும் வாட்ஸ்அப்?
ஐபோன் 14 எப்படி இருக்கும்?
ஆப்பிள் ஐபோன் 14 தொடர் ஸ்மார்ட்போன்களை இந்த ஆண்டு செப்டம்பர் மாத நிகழ்வில் அறிமுகப்படுத்தும் என்று தகவல்கள் கிடைத்துள்ளது. வரவிருக்கும் ஐபோன் ஸ்மார்ட்போன்கள் குறித்து பல தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த ஸ்மார்ட்போன்கள் A16 Bionic சிப்செட் கொண்டு இயக்கப்படும். ப்ரோ மாடல்களில் பயன்படுத்தப்படும் சிப்செட்டுகள் A16 Pro Bionic என்று அழைக்கப்படும் என்று தகவல்கள் கிடைத்துள்ளது. புதிய எல்ஜி OLED டிஸ்ப்ளே, இ-சிம் போன்ற பல்வேறு அம்சங்கள் இதில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அதுமட்டும் இல்லாமல், இந்த தொடர் ஐபோன் ஸ்மார்ட்போன்களில், மினி வெர்ஷன் இருக்காது என்று கூறப்படுகிறது. இதற்கு பதிலாக ஐபோன் மேக்ஸ் எனும் புதிய மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன்களின் எதிர்பார்க்கப்படும் விலையும் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது.
மேலதிக செய்திகள்:
Google I/O 2022: பிக்சல் வாட்ச், பிக்சல் 6A, பிக்சல் பட்ஸ் என நிறைய இருக்கு – கூகுள் நிகழ்வு ஹைலைட்ஸ்!Android 13: ஆண்ட்ராய்டு 13இல் கிடைக்கும் 10 முக்கிய அம்சங்கள்!Upcoming Phones May 2022: கூகுள் பிக்சல் முதல் விவோ X80 வரை டாப் கிளாஸ் போன்கள்