Tamil News Today Live: இந்தியாவில் மேலும் 2,858 பேருக்கு கொரோனா

Tamil Nadu News Updates: டெல்லியில் முண்ட்கா மெட்ரோ ரயில்நிலையம் அருகே உள்ள 3 மாடி வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழப்பு. 12 பேர் படுகாயம். 20க்கும் மேற்பட்ட வீரர்கள், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இவ்விவகாரத்தில் கட்டிட உரிமையாளர்கள் ஹரிஸ் கோயல் மற்றும் வருண் கோயல் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அடுத்த 2 நாள்களுக்கு மழை

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு. திருச்சி, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

பயணி தாக்கியதில் அரசு பேருந்து ஓட்டுனர் பலி

செங்கல்பட்டு: மேல்மருவத்தூரில் அரசுப் பேருந்தில் பயணி நடத்திய தாக்குதலில் நடத்துனர் பெருமாள்(54) உயிரிழப்பு. மது போதையில் இருந்த பயணி தாக்கியதில் படுகாயமடைந்த நடத்துனர் பெருமாள் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழப்பு!

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் தொடர்ந்து 38வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ110.85-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ100.94-க்கும் விற்பனை

ஐபிஎல்: பஞ்சாப் அணி வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்டில் பெங்களூரு அணியை வீழ்த்தியது பஞ்சாப் அணி. 54 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதால், புள்ளிப் பட்டியலில் முன்னேற்றம்

Live Updates
11:08 (IST) 14 May 2022
கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் தேரோட்டம்!

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் தேரோட்டம் இன்று கோலாகலமாக தொடங்கியது. 110 அடி உயரம் கொண்ட, தெற்காசியாவின் மூன்றாவது பெரிய தேரை வடம்பிடித்து இழுத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

10:53 (IST) 14 May 2022
கோதுமை ஏற்றுமதி நிறுத்தம் விவசாயிகளுக்கு எதிரானது – ப.சிதம்பரம்

கொரோனாவிற்கு பின்பு இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி மிகவும் மெதுவாக உள்ளது. கோதுமை ஏற்றுமதிக்கு தடை என்பது விவசாயிகளுக்கு எதிரானது என காங்கிரஸ் எம்.பி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

10:51 (IST) 14 May 2022
1.18 லட்சம் மாணவர்கள் ஆப்சென்ட்

10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1.18 லட்சம் மாணவர்கள் ஆப்சென்ட். கொரோனாவால் ஏற்பட்ட சமூக- பொருளாதார நெருக்கடியே மாணவர்கள் பங்கேற்காததற்குக் காரணம் என பள்ளிக்கல்வித்துறை தகவல்

10:06 (IST) 14 May 2022
கோதுமை ஏற்றுமதிக்கு தடை

கோதுமை விலை அதிகரித்து வரும் நிலையில், கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசுக்கு தடை விதித்துள்ளது.

09:26 (IST) 14 May 2022
ஜூன் 3 அரசு சார்பில் மலர் கண்காட்சி

ஜூன் 3 கருணாநிதி பிறந்தநாள் அன்று சென்னை மாநகர வரலாற்றில் முதல் முறையாக அரசு சார்பில் மலர் கண்காட்சி. சென்னை கலைவாணர் அரங்கில் ஜூன் 3 ஆம் தேதி முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. புனே, பெங்களூரு, ஊட்டி, ஒசூர், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட வகையிலான மலர்களால் கண்காட்சி நடத்தப்படும் என அறிவிப்பு

08:56 (IST) 14 May 2022
இந்தியாவில் மேலும் 2,858 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,858 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

08:39 (IST) 14 May 2022
தாமஸ் கோப்பை பேட்மிண்டன் – இறுதிக்குள் இந்தியா

தாய்லாந்தில் தாமஸ் கோப்பை பேட்மிண்டன் இறுதிப் போட்டிக்கு முன்னேறி வரலாற்று சாதனை படைத்துள்ளது இந்திய அணி. அரையிறுதியில் இந்திய ஆடவர் அணி 3-2 என்ற புள்ளிக் கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி

08:06 (IST) 14 May 2022
ஆளுநர் ஆர்.ஏன்.ரவி இன்று திடீர் டெல்லி பயணம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி இன்று காலை 10 மணிக்கு திடீர் பயணமாக சென்னையிலிருந்து டெல்லி செல்கிறார்.மே 16 ஆம் தேதி சென்னை பல்கலை விழாவில் முதல்வருடன் பங்கேற்கும் நிலையில், டெல்லி செல்கிறார் ஆளுநர்.

08:05 (IST) 14 May 2022
ஆளுநர் ஆர்.ஏன்.ரவி இன்று திடீர் டெல்லி பயணம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி இன்று காலை 10 மணிக்கு திடீர் பயணமாக சென்னையிலிருந்து டெல்லி செல்கிறார்.மே 16 ஆம் தேதி சென்னை பல்கலை விழாவில் முதல்வருடன் பங்கேற்கும் நிலையில், டெல்லி செல்கிறார் ஆளுநர்.

08:05 (IST) 14 May 2022
சென்னையில் இன்று ரேஷன் கார்டு குறைதீர் முகாம்

சென்னையில் இன்று ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்வதற்கான குறைதீர் முகாம். 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.