அக்டோபர் 2-ம் தேதி முதல் காஷ்மீர் – கன்னியாகுமரி வரை மிக பிரம்மாண்டமான பேரணி நடத்தப்படும் எனவும், இதில் மூத்த தலைவர்கள் இளம் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு தொண்டர்களும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் சோனியா காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்ற மூன்று நாள் “சிந்தனை அமர்வு” கூட்டத்தில், பொருளாதாரம் விவசாயம் காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி விவகாரம் போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில் இது குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உதய்பூர் பிரகடனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் முக்கியமாக வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல் காஷ்மீர் – கன்னியாகுமரி வரை காங்கிரஸ் கட்சி பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டள்ளது. காங்கிரஸ் கட்சி மக்களிடமிருந்து தோன்றியது… இப்போது காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளையும் மீண்டும் மக்களிடமிருந்தே தொடங்கக் கூடிய வகையில் காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி அன்று முதல் காஷ்மீர் டு கன்னியாகுமரி வரை காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைவரும் பேரணியில் பங்கேற்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க… `அடுத்த 2 வாரங்கள் மிகவும் தீர்க்கமான நாட்கள்’- இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
எந்தவிதமான இடைவெளியும் இல்லாமல் தொடர்ச்சியான பேரணியாக இது நடைபெறும் என்றும் நாட்டில் தற்பொழுது நிலவக்கூடிய வேலையின்மை விலைவாசி உயர்வு, வெறுப்புணர்வு போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்தும் மக்களிடம் நேரடியாக எடுத்துரைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM