மார்டன்: பாகிஸ்தான் தெஹ்ரிக் இ-இன் சாப் கட்சி சார்பில் மார்டன் நகரில் நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமரும் கட்சி தலைவருமான இம்ரான் கான் பேசியதாவது:
அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அரசியல் கட்சிகளின் சதியால் எனது ஆட்சி கவிழ்க்கப்பட்டது. பல்வேறு ஊழல் விவகாரங்களில் சிக்கிய திருடர்கள் தற்போது நாட்டை ஆட்சி செய்கிறார்கள். திருடர்களிடம் நாட்டின் அதிகாரத்தை கொடுப்பதைவிட பாகிஸ்தான் மீது அணுகுண்டு வீசுவது நல்லது.
பிரிட்டனில் இருந்து சிலர் (நவாஸ் ஷெரீப்) பாகிஸ்தானின் விதியை முடிவு செய்கிறார்கள். புதிய அரசை தேர்வு செய்ய மக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். இதற்கு நாடாளுமன்ற தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும். மக்கள் சாலையில் இறங்கி போராடினால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு இம்ரான் கான் பேசினார்.