தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு நரகம் காத்திருக்கிறது என்று விமர்சித்த நடிகையை மராட்டிய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மராத்தி மொழிபடங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த நடிகை கேதகி சிதலே அவ்வப்போது சமூக வலைதளங்களில் அரசியல் மற்றும் சமூக கருத்துக்களை பதிவிடுவது வழக்கம்.
மகராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் கூட்டணி ஆட்சி நடந்துவரும் நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் குறித்து முக நூலில் , மராட்டிய நடிகை கேதகி சிதலே என்பவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
பிராமணர்களை வெறுப்பதால் சரத்பவாருக்கு நரகம் காத்திருப்பதாக அந்த பதிவில் கூறி இருந்தார். இது தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
பா.ஜ.கவின் தூண்டுதலின் பேரில் நடிகை கேதகி இந்தக்கருத்தை கூறியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகளிடம் புகாரை பெற்ற போலீசார் நடிகை கேதகியை சனிக்கிழமை மாலை கைது செய்தனர்
கடந்த சில தினங்களுக்கு முன்பு மாநில அரசுக்கு எதிராக அனுமன் சலீசா படிக்க முயன்றதாக நடிகையும் எம்.பியுமான நவ்னீத் ராணாவை, அவரது கணவருடன் மகாராஷ்டிர போலீசார் கைது செய்தது குறிப்பிடதக்கது.