அலரிமாளிகைக்கு முன்பாக கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புபட்டதாகக் கூறப்படும் நபர் ஒருவர் மொரட்டுவை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில், குறித்த நபர் மொரட்டுவை – மொரட்டுமுல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்
கைதானவர், மொரட்டுவை மாநகர சபையில் சேவையாற்றும் 49 வயதுடைய ஊழியர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவரை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜார்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் ,சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணை முன்னெடுத்துவருகின்றர்.