பெங்களூரு : பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள, மாம்பழ அபிவிருத்தி, மார்க்கெட் கார்ப்பரேஷன், மாம்பழங்களை ஆன்லைனில் விற்பனை செய்ய, இரண்டு சதவீதம் கமிஷன், லால்பாகின் மாம்பழ மேளா கடைகளுக்கு வாடகை விதித்துள்ளது. இது விவசாயிகளுக்கு அதிருப்தியளித்துள்ளது.கொரோனாவால் இரண்டு ஆண்டுகளாக, மாம்பழ மேளா நடக்கவில்லை.
இம்முறை மழை, வானிலை மாற்றத்தால் விளைச்சல் குறைந்தது. தற்போது சூறாவளி காற்றுடன் கூடிய மழை, ஆலங்கட்டி மழையால் காய்கள் உதிர துவங்கியுள்ளது.கைக்கு கிடைத்த சொற்ப விளைச்சலை, மாம்பழ அபிவிருத்தி, மார்க்கெட் கார்ப்பரேஷன் மற்றும் தனியாரின் ஆன்லைன் இணையதளம் மூலம், விற்பனை செய்து விவசாயிகள் லாபமடைகின்றனர். விவசாயிகள் பலரும் ஆன்லைனில் பழங்களை விற்பதில் ஆர்வம் காண்பிக்கின்றனர்.
பெங்களூரில் இம்மாதம் 9ல், மாம்பழ விவசாயிகளுடன், மாம்பழ அபிவிருத்தி வாரிய அதிகாரிகள், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், ஆன்லைன் விற்பனைக்கு, இரண்டு சதவீதம் கமிஷன் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டனர். அது மட்டுமின்றி, லால்பாகில் நடக்கும் மாம்பழ மேளாவில், பதிவு செய்து கொள்ள 250 ரூபாய்; கடைக்கு 100 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது.இதற்கு விவசாயிகள், எதிர்ப்பு தெரிவித்த போது, மாம்பழ அபிவிருத்தி வாரியம், பொருளாதார நெருக்கடியில்உள்ளது. எனவே ஆன்லைன் சேவையை நிறுத்துவதாக அதிகாரிகள் கூறினர். இதனால் விவசாயிகள், வேறு வழியின்றி கமிஷன், வாடகை செலுத்த சம்மதித்தனர்.
Advertisement