தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. கடந்த 12ந்தேதி நடந்த காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 43 ஆண்டுகளுக்கு பிறகு அரை இறுதிக்குள் நுழைந்தது.
அதனை தொடர்ந்து நடைபெற்ற அரையிறுதியில், டென்மார்க் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இன்று நடைபெற்ற இறுதி போட்டியில், 14 முறை சாம்பியனான இந்தோனேசியாவை வீழ்த்தி இந்தியா முதல் முறையாக தாமஸ் கோப்பையை வென்று மாபெரும் சாதனையை படைத்துள்ளது.
இந்நிலையில், வெற்றிபெற்றுள்ள இந்திய அணிக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரின் அந்த வாழ்த்துச்செ செய்தியில்,
“தாய்லாந்தில் நடந்த தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை புரிந்திருக்கும் இந்திய அணியின் வீரர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தாய்லாந்தில் நடந்த தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை புரிந்திருக்கும் இந்திய அணியின் வீரர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். (1/3) #BadmintonIndonesia
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 15, 2022
சுதந்திர இந்தியாவின் 73 ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்டிருக்கும் இச்சாதனையின் மூலம் இந்திய விளையாட்டுத்துறையின் மகுடத்தில் மேலும் ஒரு மாணிக்கம் சேர்ந்திருக்கிறது.
பேட்மிண்டன் விளையாட்டில் ஆர்வம் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு புதிய நம்பிக்கையை விதைத்திருக்கும் இந்திய பேட்மிண்டன் அணியின் வெற்றிப்பயணம் தொடரட்டும்” என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.