பிராக் : செக் குடியரசில், உலகின் மிகப்பெரிய தொங்கு நடைபாலம், மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான செக் குடியரசின் டோல்னி மோரோவா கிராமத்தில், ‘ரிசார்ட்’ எனப்படும், ஒரு சொகுசு விடுதி அமைந்துள்ளது. இங்கு, சுற்றுலா பயணியரை ஈர்க்கும் விதமாக, ஸ்லாம்னிக் மலையையும், கிலம் மலையையும் இணைக்கும் வகையில், பிரமாண்டமான தொங்கு நடைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.’ஸ்கை பிரிட்ஜ் – 721′ என, பெயரிடப்பட்டுள்ள இந்த நடைபாலம், 65 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.
312 அடி உயரத்தில், 2,365 அடி நீளம் மற்றும், 4 அடி அகலத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த பாலம், உலகின் மிகப்பெரிய தொங்கு நடைபாலமாகும்.இதற்கு முன், நேபாளத்தில், 1,860 அடி நீளமுடைய பாங்லங் பார்பத் தொங்கு நடைபாலம், உலகின் மிகப்பெரிய தொங்கு நடைபாலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த ஸ்கை பிரிட்ஜ் – 721 நடைபாலம், நேற்று முன்தினம், மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
பிராக் : செக் குடியரசில், உலகின் மிகப்பெரிய தொங்கு நடைபாலம், மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய நாடான செக் குடியரசின் டோல்னி மோரோவா கிராமத்தில், ‘ரிசார்ட்’
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.