உஷார்… தண்ணீர் அதிகம் குடித்தால் இந்த ஆபத்து இருக்கு: எச்சரிக்கும் நிபுணர்

டெல்லி, இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் டாக்டர் சுரஞ்சித் சாட்டர்ஜி, வெப்பம் தொடர்புடைய நோய்கள் குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் ANONNA DUTT-வுடன் கலந்துரையாடினார்.

அப்போது, வெயிலின் தாக்கத்தால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஏன் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை விளக்கினார். மேலும், வெப்பநிலை குறையும் வரை வீட்டிற்குள் உடற்பயிற்சி செய்ய மக்களை வலியுறுத்தினார்.

வெப்பம் தொடர்பான பாதிப்பு என்றால் என்ன? தற்காப்பது எப்படி?

பகலில் வெளியே செல்வோர் வெப்பநிலை காரணமாக சோர்வாக காணப்படுவார்கள். அதே சமயம், அதிக வெப்பநிலை பக்கவாதத்திற்கும் வழிவகுக்கும். உடல் 40 டிகிரி செல்சியஸ் மேலான சூட்டை உணரும் போது உறுப்புகள் பாதிக்கப்படும். நரம்பியல் செயலிழப்புகள் ஏற்படுகின்றன. மயக்கம், சொறி ஏற்படுவது உண்டு

நீங்கள் வெயில் நேரத்தில் வெளியே செல்கிறீர்கள் என்றால், உடலில் நீரிழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நீரேற்றத்தை தண்ணீரின் வடிவிலோ அல்லது ஷிகன்ஜி போன்ற எலக்ட்ரோலைட்டுகள் பானங்கள் வழியாகவும் ஏற்றலாம். எனவே, நீங்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். அதேபோல், நீரிழப்பு ஏற்பட்டால், சிறுநீர் வெளியேற்றும் அளவு குறைவதையும் காண முடியும்.

இதுதவிர, வெப்பம் அதிகமாக இருக்கும் சமயத்தில், டார்க் கலர் ஆடை, இறுக்கமான ஆடை, சின்தடிக் ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். அச்சமயத்தில், லைட் கலர் மற்றும் வெளிர் நிற, பருத்தி ஆடைகள் சிறந்த சாய்ஸ் ஆகும். தலையில் தொப்பி அல்லது துணி வைத்து மறைத்துகொள்வது உதவிப்புரியும். பெரும்பாலும், அதிக வெப்பநிலை இருக்கும் சமயத்தில், வெளியே செல்லாமல் வீட்டுலே இருப்பது நல்லது

எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? அதிகம் குடித்தால் ஆபத்தா?

ஆம். அளவுக்கு மீறி தண்ணீர் குடித்தால் ஆபத்து தான். 20 நிமிடங்களுக்க ஒரு முறை தண்ணீர் குடிப்பதாக மக்கள் சொல்லி கேட்டிருக்கேன். ஆனால், அது பலன் தராது. தண்ணீர் உட்கொள்ளும் அளவு ஒரு நபரின் ஆரோக்கியத்தைப் பொறுத்தது.

உதாரணமாக, இளைஞர் ஒருவர் 2.5 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். வெயிலுக்குள் வெளியே சென்றால், கூடுதலாக அரை அல்லது 1 லிட்டர் தண்ணீர் குடிக்கலாம். ஒருவேளை அதிகமாக தண்ணீர் குடித்துவிட்டால், தண்ணீரை வெளியேற்றும் சீறுநிரகத்தின் செயல்பாடுகிளில் சிக்கல் ஏற்படும். அதிகப்படியான நீர் எலக்ட்ரோலைட் சமநிலையின்மைக்கும் வழிவகுக்கும்.

அவர்கள் சிறுநீரகம் அல்லது இதய பிரச்சினையில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகமாக தண்ணீர் குடிக்கையில், கால்கள், வயிறு மற்றும் மார்பில் திரவம் குவிந்து, சுவாசிப்பதில் சிரமத்திற்கு வழிவகுக்கும்.இத்தகைய பிரச்சினை இருப்பவர்கள், நாள் முழுவதும் 1 முதல் 1.5 லிட்டர் வரை மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும்.

திரவக் கட்டுப்பாடு பாதிப்பு உள்ளவர்கள், எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம் என்பதை அறிய மருத்துவரைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

மக்கள் வெயிலில் இருக்கும்போது எலக்ட்ரோலைட் நிறைந்த திரவத்தை குடிப்பது சிறந்தது ஆகும். ஆராக்கியமான நபர் இரண்டு அல்லது மூன்று கிளாஸ் ஷிகன்ஜி குடிப்பது தப்பு கிடையாது. ஒருவேளை வேறு பிரச்சினை இருந்தால், குடிப்பதை செக் செய்வது அவசியமாகும். எடுத்துக்காட்டாக, நீரிழிவு நோயாளிகள் ORS கரைசல்களைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அதில் சர்க்கரை கண்டனட் அதிகமாகும்.

எந்த வயதினருக்கு அதிக ஆபத்து?

5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெப்பத்தின் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் வெப்பமான நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். அவ்வப்போது தண்ணீர் குடித்து, உடலை நீரேற்றதுடன் வைத்துகொள்ள வேண்டும்.

மேலும், இதய நோய்கள், நீரிழிவு நோய், தைராய்டு போன்ற இணைநோய் இருப்பவர்கள் சூரிய ஒளியின் தாக்கத்தை அதிகமாக உணர வாய்ப்புள்ளது.

கோடையில் மக்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டுமா?

உடற்பயிற்சி செய்வது ஒரு பிரச்சனையல்ல. வெயிலுக்குள் செய்வதை தவிர்க்க வேண்டும். மக்கள் நடைபயிற்சி அல்லது ஜாகிங் செல்ல விரும்பினால், அதை அதிகாலை 5-6 மணிக்குள் அல்லது மாலை 7 மணிக்குப் பிறகு செய்ய வேண்டும்.

காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வெப்பம் அதிகமாக இருக்கும் போது மக்கள் எந்தவிதமான உடல் செயல்பாடுகளையும் செய்யக்கூடாது.

மக்கள் வீட்டிற்குள் உடற்பயிற்சி செய்ய முடியுமானால், தாராளமா செய்யலாம். தேவைப்பட்டால் உடற்பயிற்சி கூடத்திற்கும் செல்லாலாம். அதை வெளிப்புற உடற்பயிற்சியை காட்டிலும் சிறந்தது ஆகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.