சென்னை:
ஊரடங்கு உத்தரவுகளை மீறியதாக போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார்.
இதுகுறித்து டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில்,கடந்த 2019 முதல் 2020 வரை கொரோனா விதிமுறைகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் வழக்குகள் ரத்து செய்யப்படுகின்றன.
மேலும் அந்த அறிக்கையில், இ-பாஸ் முறைகேடு, காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட குற்றங்களை தவிர அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.