எரிபொருள் நிலையங்களுக்கு இன்று எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இலங்கை பெற்றோலிய சேமிப்பகம் அறிவித்துள்ளது.
இதேவேளை டீசல் இன்மையால் நாடு முழுவதும் பேருந்து சேவைகளை 10 சதவீதமாக குறைக்க நேரிட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
தொடருந்து டீசல் கிடைக்காவிடின் நாளை முதல் தனியார் பேருந்துகள் சேவையில் இருந்து விலக நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியில் சகல பேருந்துகளும் வழமை போன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் சில நாட்களுக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளுக்கு மாத்திரமே டீசல் கையிருப்பில் உள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க கூறியுள்ளார்.