ஐபிஎல் : லக்னோ அணிக்கு 179 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி

மும்பை, 
ஐபிஎல் 15-வது சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது. பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடர் தற்போது பிளே ஆப் நோக்கி நகர்ந்து வருகிறது. 
இன்று நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ -ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன .

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் ,யாஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர் .தொடக்கத்தில் பட்லர் 2 ரன்களில் ஆட்டமிழந்தார் ,பின்னர் வந்த கேப்டன் சாம்சன் ஜெஸ்வாலுடன் இணைந்து சிறப்பாக விளையாடினார் .
ஒரு சில பந்துகளை பவுண்டரி ,சிக்சருக்கு விரட்டிய இருவரும் விரைவாக ரன்கள் சேர்த்து பொறுப்புடன் ஆடினர். சாம்சன் 32 ரன்களில் வெளியேறினார் .பின்னர் படிக்கல் களமிறங்கினார் .அதன்பிறகு ஜெய்ஸ்வால் 41 ரன்களிலும்  ,தேவ்தத் படிக்கல் 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர் .
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178  ரன்கள் எடுத்தது ராஜஸ்தான் .தொடர்ந்து 179 ரன்கள் இலக்குடன் லக்னோ அணி விளையாடுகிறது 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.