கரண்ட் பில்லை குறைக்க நூதன முறையில் மோசடி!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மின்வெட்டு பிரச்சினை நிலவுகிறது. இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதனிடையே, நிலக்கரி கையிருப்பும் மிகக்குறைந்த அளவில் இருப்பதாகத் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிலக்கரி தட்டுப்பாட்டால் தான் மின்வெட்டு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், போதுமான நிலக்கரி கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இருபோன்று மின்வெட்டு பிரச்சினைகள் ஒருபுறமிருக்க, மின்சாரத்தை குறைவாகக் காட்டி மோசடி செய்ததாக தந்தை, மகன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் பாலேகான் என்ற இடத்தில் கல்குவாரி ஒன்று உள்ளது. இந்த குவாரியின் மின்கட்டணம் ஒவ்வொரு மாதமும் மிகவும் குறைவாகவே வந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த அதிகாரிகள் அங்கு சென்று சோதனையிட்டுள்ளனர்.

அப்போது, மீட்டரில் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்க கூடிய சர்க்கியூட் பொருத்தப்பட்டு, பயன்படுத்தப்படும் மின்சாரத்தை குறைவாகக் காட்டி மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த மோசடி கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நடந்துள்ளது. இதன் மூலம், ரூ.5.93 கோடி மதிப்புள்ள
மின்சாரம்
திருடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, கல்குவாரியின் உரிமையாளர் சந்திரகாந்த் அவரது மகன் சச்சின் மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவர்களிடம் விசாரணை மேஎற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள மின்வாரியங்கள் நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில், இந்த மோசடி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.