சென்னை: கடந்த 2019-2020 ஆண்டு கரோனா காலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 10 லட்சம் வழக்குகள் கைவிடப்படுவதாக தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக காவல்துறையினருக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கரோனா ஊரடங்கு காலத்தில், ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள், வதந்தி பரப்பியவர்கள், உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பியவர்கள் ஆகியோர்கள் மீது சுமார் 10 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இவ்வழக்குகளுள் வன்முறையில் ஈடுபட்டு குறிப்பிட்ட குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள், முறைகேடான வழிகளில் இ-பாஸ் பெற்று பயன்படுத்தியது மற்றும் காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் போன்றவற்றைத் தவிர மற்ற அனைத்து வழக்குகளும் பொதுமக்களின் நலன் கருதி கைவிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.