கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலையானது அவ்வப்போது ஏற்றம் கண்டாலும், மொத்தமாக பார்க்கும்போது சரிவிலேயே காணப்படுகின்றது.
இது தொடர்ந்து அமெரிக்க டாலரின் மதிப்பு ஏற்றம், பத்திர சந்தை ஏற்றம் உள்ளிட்ட சில காரணிகள் மத்தியில் சரிவினைக் கண்டு வருகின்றது.
தொடர்ந்து சர்வதேச அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்கள், சீனாவில் நிலவி வரும் கொரோனா லாக்டவுன் உள்ளிட்ட பல காரணிகளுக்கு மத்தியில், நீண்டகால நோக்கில் தங்கம் விலை எப்படியிருக்கும்? வாருங்கள் பார்க்கலாம்.
எல்ஐசி ஐபிஓ.. நாளை மறுநாள் பட்டியல்.. கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்ன?
அரசியல் பதற்றம்
தொடர்ந்து நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் பணவீக்க விகிதமானது, தொடர்ந்து வரலாறு காணாத அளவு உச்சம் தொட்டு வருகின்றது. எனினும் பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தினை அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. எனினும் தற்போது வரையில் ரஷ்யா உக்ரைன் பிரச்சனையானது, தற்போது வரையில் சுமூக நிலையை எட்டியதாக தெரிய வில்லை.
தங்கத்திற்கு ஆதரவு
இந்த பதற்றமான நிலைக்கு மத்தியில் உலகம் முழுவதும் சப்ளை சங்கிலியில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொருளாதார வளர்ச்சியில் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பணவீக்கம் இன்னும் உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது தொடர்ந்து வளர்ந்து வரும் நிதிச் சந்தைகளில் இருந்து முதலீடுகள் வெளியேற வழிவகுக்கலாம். ஆக இது நீண்டகால நோக்கில் தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம்.
கச்சா எண்ணெய் விலை
இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக கச்சா எண்ணெய் விலையும் இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் பணவீக்கத்தினை தூண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் வரவிருக்கும் வாரத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய 5 விஷயங்களை நிபுணர்கள் கூறியுள்ளனர்.
5 முக்கிய அம்சங்கள்
ஒன்று டாலரின் மதிப்பு மேற்கொண்டு வலுவடையலாம். இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் அழுத்தம் கொடுக்கலாம்.
இரண்டாவதாக கச்சா எண்ணெய் விலையால் தாக்கம் இருக்கலாம், மூன்றாவது உக்ரைன் – ரஷ்யா பிரச்சனை இன்னும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
4வது இந்திய ரூபாயின் மதிப்பு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
5வது அமெரிக்காவின் சில்லறை விற்பனை தொடர்பான தரவு, ஃபெடரல் வங்கியின் தலைவர் பேச்சு என பலவும் விலையில் முக்கிய பங்கு வகிக்கலாம்.
குறைந்த விலையில் தங்கம்
எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலையானது அவ்வப்போது ஏற்றம் கண்டாலும், மொத்தமாக பார்க்கும்போது சரிவிலேயே காணப்படுகின்றது. ஆக இது குறைந்த விலையில் நீண்டகால நோக்கில் வாங்க சரியான வாய்ப்பாகவும் அமையலாம். இது தங்கம் விலைக்கு சாதகமாக அமையலாம்.
Gold at a low price; 5 important factors to look out for in the coming weeks
Inflation, China Lock down, Ukraine Russia problem, dollar value, bond market and many more can have an impact on gold prices. However a lower price can also lead to a purchase in the long term.