மாண்டியா : சாலை ஓரத்தில் கொட்டப்பட்டிருந்த, திராட்சையை பொது மக்கள் முட்டி மோதி, அள்ளி சென்ற சம்பவம், மாண்டியாவில் நடந்தது.மாண்டியா நகரின், வி.சி.பாரம் கேட் அருகில், நேற்று காலை சாலை ஓரத்தில் கிலோ கணக்கில் திராட்சை கொட்டிக்கிடந்தது. இதை பார்த்த மக்கள், முட்டி மோதி அள்ளிச்சென்றனர்.
பைகள், பிளாஸ்டிக் கவர்களில் நிரப்பி கொண்டு சென்றனர்.விலை சரியும் போது, தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகளை, விவசாயிகள் விற்க விருப்பமின்றி, சாலையில் கொட்டியதை பார்த்திருக்கிறோம். ஆனால் திராட்சை விலை கிலோவுக்கு, 70 முதல் 80 ரூபாய் வரை உள்ளது. நல்ல விலை இருந்தும், சாலையில் கொட்டியது ஏன் என்பது, மர்மமாக உள்ளது.டிராக்டரில் வந்த நபர் ஒருவர், 80 கிலோவுக்கும் மேற்பட்ட திராட்சையை, சாலை ஓரத்தில் கொட்டி சென்றதை அப்பகுதியினர் பார்த்துள்ளனர். ஆனால் அவர் யார், தரமான திராட்சையை சாலையில் கொட்டினர் என்பது தெரியவில்லை.
மாண்டியா : சாலை ஓரத்தில் கொட்டப்பட்டிருந்த, திராட்சையை பொது மக்கள் முட்டி மோதி, அள்ளி சென்ற சம்பவம், மாண்டியாவில் நடந்தது.மாண்டியா நகரின், வி.சி.பாரம் கேட் அருகில், நேற்று காலை சாலை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.