தென்னிந்தியாவில் பெங்களூர் உள்பட பல நகரங்களில் வீட்டின் விலையானது அதிகரிக்கலாம் என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
இந்த விலை அதிகரிப்பானது 8 – 10 சதவீதம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மூலதன பொருட்கள் விலை அதிகரிப்பால் இருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள அரசியல் பதற்றம் காரணமாக சப்ளை சங்கிலியில் ஏற்பட்டுள்ளது.
அந்நிய செலாவணி இருப்பு சரிவு ஏன்.. இந்தியாவுக்கு இதனால் என்ன பிரச்சனை வரலாம்?
மூலதன பொருட்கள் விலை அதிகரிப்பு
சப்ளை பிரச்சனை காரணமாக மூலதன பொருட்கள் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது வீடுகளின் கட்டமைப்பு செலவினை அதிகரிக்கலாம். குறிப்பாக இரும்பு, சிமெண்ட், அலுமினியம், பிவிசி விலைகள் 30 – 100% வரையில் விலை அதிகரித்துள்ளது.
ஆக பணவீக்கம் உள்ளிட்ட பல காரணிகளினால் நடப்பு நிதியாண்டில் விலை அதிகரிப்பினை தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும்.
செலவு அதிகரிப்பு
ஆக எதிர்கால திட்டங்களுக்கான செலவுகளும் அதிகரிக்கும். இது 10 – 15% விலை அதிகரிப்பினை எதிர்பார்க்கிறோம் என ஸ்ரீராம் பிராபர்டீஸ் இயக்குனர் எக்னாமிக் டைம்ஸ்-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தேவை அதிகரித்து வரும் நிலையில் செலவினங்களும் அதிகரித்து வருகின்றன, இது டெவலப்பர்களை புதிய திட்டங்களை பிரீமிய விலையில் விற்பனை செய்ய வழிவகுக்கும்.
அரசியல் பதற்றமும் காரணம்
இவ்வாறு அதிகரித்து வரும் விலையால் டெவலப்பர்களுக்கான மார்ஜின் விகிதத்தினை பாதிக்கலாம். எனினும் இந்த பிரச்சனை தற்காலிகமானது தான். நிலவி வரும் அரசியல் பதற்றங்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர், நிலைமை சீரடையலாம். விலை இயல்பு நிலைக்கு திரும்பலாம். அப்போது வீடுகளுக்கான தேவையும் இயல்பு நிலைக்கு திரும்பலாம்.
கொரோனாவுக்கு முந்தைய நிலை
இது குறித்து Brigade Group அறிக்கையில், வீடுகளின் தேவையானது 5 – 10% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் வீடுகளுக்கான தேவையானது 33 – 38% அதிகரித்தது. இது கொரோனாவுக்கு முந்தைய காலத்தினை விட வளர்ச்சி கண்டது மதிப்பிடத்தக்கது.
கிரிசில் மதிப்பீடு
இதற்கிடையில் கிரிசில் ஆய்வறிக்கையானது நடப்பு ஆண்டில் 6 நகரங்களில் வீடுகளின் விலையானது ரியல் எஸ்டேட் விலையானது 6 – 10% அதிகரிக்கலாம் என கிரிசில் அறிக்கையானது தெரிவித்துள்ளது. இது மூலதன பொருட்கள் விலை அதிகரிப்பால், தேவை அதிகரிப்பால் இருக்கலாம் என தெரிவித்துள்ளது. ஆக டெவலப்பர்கள் ஒரு காலாண்டுக்கு 2% விலையினை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
Residential property prices may rise in south india
In many cities in southern India, including Bangalore, house prices may rise by 8-10 percent.