ஜம்மு- காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினருக்கம் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் பொது மக்களில் ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியானார்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
சோபியானில் உள்ள துர்க்வாங்கம் மற்றும் லிட்டர் புல்வாமாவை இணைக்கும் பாலம் அருகே மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையின் கூட்டு ரோந்துக் குழுவுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சூடு நடந்தது.
துப்பாக்கிச் சண்டையின்போது துர்க்வாங்கத்தைச் சேர்ந்த பொது மக்களில் ஒருவரான ஷோயிப் அஹ் கனி என்பவர் காயமடைந்தார். இவர் அங்குள்ள மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதற்கிடையே, சிறிது நேர என்கவுண்டருக்குப் பிறகு பயங்கரவாதிகள் அங்குள்ள பழத்தோட்டங்களுக்குள் மறைந்துவிட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. பறக்கும் தட்டுக்கள் குறித்து அமெரிக்காவில் வழக்கு விசாரணை