வாரணாசி : வாரணாசி ஞானவாபி மசூதியில் இரண்டாவது நாளாக இன்றும் (மே.15) கள ஆய்வு அமைதியாக நடந்தது.
உத்தர பிரதேசத்தில், வாரணாசியில் உள்ள விஸ்வநாதர் கோவில் அருகே உள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புறச் சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை உள்ளது. இந்த சிலைக்கு தினமும் பூஜை செய்ய அனுமதி கோரி, வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த உள்ளூர் நீதிமன்றம், மசூதியில் கள ஆய்வு மேற்கொள்ள, ஐந்து பேர் அடங்கிய குழுவை அமைத்தது. அறிக்கையை, 17 ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
இதையடுத்து, மசூதியில் ஆய்வு பணி துவங்கியது. இதையொட்டி, பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மசூதியில் இன்றும் ஆய்வு பணி அமைதியாக நடந்தது.
இதுவரை 65 சதவீத ஆய்வுப் பணி முடிந்துள்ளதாக ஆய்வுக் குழுவினர் திட்டமிட்டபடி மே. 17-ம் தேதியன்று சமர்ப்பிக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
வாரணாசி : வாரணாசி ஞானவாபி மசூதியில் இரண்டாவது நாளாக இன்றும் (மே.15) கள ஆய்வு அமைதியாக நடந்தது.உத்தர பிரதேசத்தில், வாரணாசியில் உள்ள விஸ்வநாதர் கோவில் அருகே உள்ள ஞானவாபி மசூதியின்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.