புதுடெல்லி:
டெல்லி மேற்கு பகுதியில் உள்ள முன்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே 3 அடுக்குமாடி அலுவலகம் நேற்று முந்தினம் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் 30 பேர் பலியகினர். 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தீ விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய்வர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தீ விபத்து நடந்த பகுதியில் வசித்து வரும் 52 வயது மம்தா தேவி என்பவர் இந்த தொழிற்சாலையில் 8 நாட்களாக பணியாற்றி வருகிறார். அவரது கணவர் மாற்றுத்திறனாளி ஆவார். தீ விபத்து ஏற்பட்டபோது சம்பவ இடத்தில் இருந்த அவர் 6 குழந்தைகளை காப்பாற்றினார்.
அவினாஷ் என்ற 27 வயது இளைஞர் ஜன்னல் கண்ணாடியை உடைத்து ஒரு பெண் மற்றும் அவரது குழந்தை இருவரையும் பத்திரமாக மீட்டுள்ளார். பிறகு 2வது தளத்தில் மாட்டியிருந்த 70 முதல் 80 பேர் வரையிலான தொழிலாளர்களை மீட்டுள்ளார்.
வினித் குமார் என்பவர் வெப்பம் காரணமாக மயங்கி விழுந்தவர்களை காப்பாற்றியுள்ளார். இதில் சிலர் இறந்தவர்களின் உடலுக்கிடையில் மயங்கி விழுந்ததாகவும், அவர்களை நினைவுக்கு கொண்டு வந்து, தீயில் இருந்து காப்பாற்றியுள்ளார்.